காரப் பூண்டு சட்டினி | Spicy garlic chutney in Tamil

எழுதியவர் Priya Mani  |  25th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Spicy garlic chutney by Priya Mani at BetterButter
காரப் பூண்டு சட்டினிPriya Mani
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

970

0

காரப் பூண்டு சட்டினி recipe

காரப் பூண்டு சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy garlic chutney in Tamil )

  • சிவப்பு மிளகாய்த் துண்டுகள் 1/2 தேக்கரண்டி
  • கடுகு
  • வதக்குவதற்கும் தாளிப்பதற்கும் எண்ணெய்
  • புளிக்கரைசல்
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • சுவைக்கேற்ற உப்பு
  • தேங்காய்த் துருவல் 2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  • 3ல் இருந்து 4 காய்ந்த மிளகாய்
  • 2 பழுத்தத் தக்காளி பாதியாக நறுக்கப்பட்டது
  • 2 பல் தோலுரிக்கப்பட்டு கழுவப்பட்டப் பூண்டு

காரப் பூண்டு சட்டினி செய்வது எப்படி | How to make Spicy garlic chutney in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெய் சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கி காய்ந்த மிளகாய், தக்காளி, சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கியபிறகு தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வறுக்கவும். ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
  2. ஒரு பிளண்டரில் எல்லாவற்றையும் உப்பு பெருங்காயம், புளிக்கரைசலோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய்யையும் கடுகையும் சேர்த்து பொறிக்கவிட்டு பெருங்காயம், மிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து தீயை நிறுத்திவிட்டு சட்டினியுடன் கலக்கவும். இந்தச் சட்டினியை இட்லி தோசை ஊத்தாப்பத்தோடும் சப்பாத்தி ' பூரி மற்றும் இன்னபிறவற்றோடும் பரிமாறவும்.

Reviews for Spicy garlic chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.