வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை

Photo of Masal vadai by T.n. Lalitha at BetterButter
391
2
0.0(0)
0

பருப்பு வடை

Mar-20-2018
T.n. Lalitha
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பருப்பு வடை செய்முறை பற்றி

பருப்பு வடை

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலை பருப்பு – 1 கப்
  2. உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி
  3. பட்டாணி கடலை - 1 மேஜைக்கரண்டி
  4. சிகப்பு மிளகாய் – 4
  5. வெங்காயம் – 1
  6. பெருங்காயம் – 1 தேக்கரண்டி
  7. உப்பு – தேவைக்கேற்ப
  8. கருவேப்பிலை – சிறிதளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இரண்டு பருப்பையும் கழுவி, 2 மணிநேரம் குறைந்தது ஊற வைக்கவும். பட்டாணி கடலையை 1/2 மணிநேரம் தனியே ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை வடித்து, மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
  3. கரகரப்பாக அரைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், ஊற வைத்த பட்டாணி பருப்பு, பெருங்காயம், உப்பு, கருவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்
  4. கைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, லேசாக தட்டவும். தட்டிய வடையை, சூடான எண்ணெயில் கவனமாக போடவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. சூடான பருப்பு வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்