வீடு / சமையல் குறிப்பு / விரல் வடிவில் பொரித்த மீன்

Photo of Finger fish by Nancy Samson at BetterButter
328
2
0.0(0)
0

விரல் வடிவில் பொரித்த மீன்

May-12-2018
Nancy Samson
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

விரல் வடிவில் பொரித்த மீன் செய்முறை பற்றி

இது ஒரு உணவக தயாரிப்பு முறை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யும் விதத்தில் எளிமையாக சமைக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வஞ்சரம் மீன் - 1/4 கிலோ
  2. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  6. முட்டை - 1
  7. பிரெட் தூள் - 1கப்
  8. உப்பு - தேவையான அளவு
  9. பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
  10. இஞ்சி பூண்டு விழுது - 1+ 1/2 தேக்கரண்டி
  11. வெங்காய விழுது - 1 தேக்கரண்டி
  12. சோள மாவு - 1 கப்
  13. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீனை கழுவி சுத்தம் செய்து , முள் இல்லாமல் 1 இஞ்ச் நீள துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கப்பில் வெங்காய விழுது, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை இந்த கழ்வொயில் நன்கு பிரட்டி, அரை மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் ஊற வைக்கவும்.
  4. மற்றொரு கப்பில் முட்டை, உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைத்து கொள்ள வேண்டும்.
  5. ஒரு தட்டில் பிரெட் தூள் வைத்து கொள்ள வேண்டும்.
  6. வேறொரு தட்டில் சோள மாவு வைத்து கொள்ள வேண்டும்.
  7. மீன் ஊறியதும், கடாயில் எண்ணெயை சூடாக்கி, மீன் துண்டுகளை முதலில் சோள மாவில் புரட்டி பின்னர் முட்டை கலவையில் முக்கி, கடைசியாக பிரட் தூளில் பிரட்டி மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  8. மையோனைஸ் அல்லது தயார் பூண்டு சாசுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்