வீடு / சமையல் குறிப்பு / அரேபிய மந்தி சோறு விருந்து

Photo of Arabian mandi treat by Nancy Samson at BetterButter
1692
2
0.0(0)
0

அரேபிய மந்தி சோறு விருந்து

May-15-2018
Nancy Samson
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அரேபிய மந்தி சோறு விருந்து செய்முறை பற்றி

இது ஒரு அரபு நாட்டு காரமில்லா பிரியாணி போன்ற உணவு. செய்முறை சற்று வித்தியாசமானது. என் இஸ்லாமிய தோழி ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டது.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரபி மசாலா செய்ய:
  2. தனியா - 2 மேசைக்கரண்டி + 2 தேக்கரண்டி
  3. சீரகம் - 2 மேசைக்கரண்டி + 2 தேக்கரண்டி
  4. மிளகு - 2 மேசைக்கரண்டி
  5. ஏலக்காய் - 2 தேக்கரண்டி
  6. கிராம்பு - 1 தேக்கரண்டி
  7. பட்டை - 2 இன்ச் துண்டு
  8. இறைச்சியை ஊறவைக்க:
  9. முழு கோழி இறைச்சி (1+1/2 கிலோ) - எட்டு துண்டுகளாக வெட்டியது
  10. அரபி மசாலா - 2 மேசைக்கரண்டி
  11. வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  12. காஷ்மீரி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
  13. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு
  16. சிவப்பு கலர் அல்லது பீட்ரூட் சாறு - சிறிதளவு
  17. மண்டி சோறு செய்ய:
  18. பாசுமதி அரிசி - 2 + 1/2 கப்
  19. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  20. நறுக்கிய வெங்காயம் - 1
  21. பட்டை - 2 துண்டு
  22. ஏலக்காய் - 2
  23. கிராம்பு - 2
  24. பிரிஞ்சி இலை - 2
  25. நறுக்கிய பச்சை மிளகாய் - 4
  26. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  27. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  28. ஊறவைத்த குங்கும பூ - 1/4 கப்
  29. மண்டி சாஸ் செய்ய:
  30. தக்காளி - 6
  31. பூண்டு - 6 பல்
  32. பச்சை மிளகாய் - 4
  33. எலுமிச்சை சாறு - 1 பழத்தின் சாறு
  34. உப்பு - 1/2 தேக்கரண்டி
  35. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  36. பச்சை சாஸ் செய்ய:
  37. கொத்தமல்லி தழை - 1 கையளவு
  38. புதினா - 1 கையளவு
  39. பூண்டு - 5 பல்
  40. இஞ்சி - 1 துண்டு
  41. எலுமிச்சை பழச்சாறு - 1/2
  42. புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/4 கப்
  43. உப்பு - தேவையான அளவு
  44. பச்சை மிளகாய் - 5

வழிமுறைகள்

  1. அரபி மசாலா செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து வைக்கவும்.
  2. கருக விடாமல், வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுப்பது அவசியம்.
  3. வறுத்த மசாலாவை, ஆரவைக்கவும்.
  4. ஆறிய மசாலாவை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  5. 5 அல்லது 6 குங்குமப்பூவை 1/4 கப் பால் அல்லது நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  6. இப்போது கோழி இறைச்சியை, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  7. இறைச்சியின் உள்ளே மசாலா இறங்க ஆங்காங்கே சிறு சிறு வெட்டுகளாக கீறி விடவும்.
  8. இப்போது ஒரு பாத்திரத்தில், இறைச்சியை ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து, நன்கு பசை போல கலந்து கொள்ளவும்.
  9. இந்த மசாலா கலவையை உப்பு காரம் சரி பார்த்து, கீறி வைத்துள்ள இறைச்சியில் அனைத்து இடங்களிலும் படுமாறு நன்கு தேய்க்கவும்.
  10. இதனை 4 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் ஊற வைக்கவும்.
  11. இப்போது மந்தி சோறு செய்ய, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  12. ஒரு அகலமான நுண்ணலை தாங்கி (அவன் ப்ரூப்) பாத்திரத்தில், வதங்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கீறிய பச்சை மிளகாய், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துகலந்து வைக்கவும் .
  13. இந்த பாத்திரத்தின் மேல் ஒரு வலை (மெஷ்) தட்டை வைத்து மூடவும்.
  14. வலை தட்டின் மேல், ஊறவைத்த இறைச்சியை அடுக்கவும்.
  15. இறைச்சி அரிசி கலவை பாத்திரத்தின் விட்டத்திற்குள் இருக்க வேண்டும்.
  16. இறைச்சி வேகும் போது அதன் சாறு , உள்ளே அரிசி கலவையில் வடியும்படி கவனமாக வைக்க வேண்டும்.
  17. இவ்வாறு செட் செய்த பாத்திரத்தை, முன்சூடாகிய(இப்ரீ ஹீடட்) நுண்ணலையில் வைத்து, 425°f இல் 15 நிமிடம் சமைக்கவும்.
  18. 15 நிமிடம் கழித்து, வெப்பத்தை 325°f ஆக குறைத்து ஒரு மணி நேரம் சமைக்கவும்.
  19. இடையிடையே இறைச்சியை திருப்பி வைத்து சமைக்கவும்.
  20. ஒரு மணி நேரம் கழித்து, அரிசி வைத்த பாத்திரத்தை, சரி பார்க்கவும், அரிசி வெந்து மலர்ந்து வந்திருந்தால், அரிசி பாத்திரத்தை எடுத்து வெளியே வைத்து விடவும்.
  21. இல்லையென்றால் அரிசி வேகும் வரை சமைக்கவும்.
  22. வெந்து வெளியே எடுத்ததும் அதில் குங்குமப்பூ நீரை சுற்றிலும் ஊற்றி, அரிசி உடையாமல் கிளறி விடவும்.
  23. இறைச்சி நன்கு பொன்னிறமாக பொரியும் வரை சமைத்து, எடுத்து கொள்ள வேண்டும்.
  24. இப்போது மந்தி சாஸ் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நைசாக தேவையான நீர் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  25. இதை ஒரு சர்விங் கப்பில் வைக்கவும்.
  26. கடைசியாக பச்சை சட்னி செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை அரைத்து, தனியே சர்விங் கப்பில் வைக்கவும்.
  27. நுண்ணலை அடுப்பு இல்லாதவர்கள், மேற்கூறிய முறையில், இறைச்சியை தந்தூரி போல தவாவில் வறுத்து கொள்ளவேண்டும்.
  28. அதேபோல அரிசி கலவையை புலாவ் செய்முறையின் படி தனியே செய்து, இறைச்சியுடன் பரிமாறவும்.
  29. மந்தி புலாவ் சோறு, பொரித்த இறைச்சி, அரபி மந்தி சாஸ், பச்சை சட்னி வைத்து பரிமாறவும்.
  30. அரபு நாட்டு மண்டி சோறு அல்லது பிரியாணி விருந்து தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்