வீடு / சமையல் குறிப்பு / கறி தேங்காய் சாப்ஸ்

Photo of Mutton coconut chops by Jayanthi kadhir at BetterButter
291
2
0.0(0)
0

கறி தேங்காய் சாப்ஸ்

May-19-2018
Jayanthi kadhir
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறி தேங்காய் சாப்ஸ் செய்முறை பற்றி

மிகவும் சுவையான பாரம்பரிய உணவு. இந்த கறி தேங்காய் சாப்ஸ் என்னுடைய பாட்டியின் சிறப்பு உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறி 250 கிராம்
  2. துருவிய தேங்காய் 1/2 கப்
  3. பச்சை மிளகாய்3
  4. தனியா 2 மேஜை கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்
  6. சின்ன வெங்காயம்1 கப்
  7. பட்டை கிராம்பு
  8. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  9. கருவேப்பிலை
  10. உப்பு
  11. தக்காளி 2
  12. மிளகாய் தூள் 3 டீஸ்பூன்
  13. மிளகு 2 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கடாயில் தனியா, மிளகு, தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் வறுத்து அரைத்து கொள்ளவும்
  2. அடுத்து குக்கர் வைத்து அதில் கறி, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கறியை வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் ஒரு அடி பிடிக்காத பத்திரம் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கருவேப்பிலை சேர்த்து பின் வேக வைத்துள்ள கறி சேர்க்கவும்
  4. அதில் உள்ள தண்ணீர் பாதி சுண்டியவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து சிறுந்தீயில் சுருள வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்