வீடு / சமையல் குறிப்பு / க்ரிஸ்பி பிங்கர் சிக்கன்

Photo of Crispy finger chicken by Priyadharshini Selvam at BetterButter
234
3
0.0(0)
0

க்ரிஸ்பி பிங்கர் சிக்கன்

May-20-2018
Priyadharshini Selvam
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

க்ரிஸ்பி பிங்கர் சிக்கன் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த க்ரிஸ்பி பிங்கர் சிக்கன் ரெசிபி .

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2கிலோ  
  2. முட்டை - 1
  3. மைதா - 1கப்
  4. பிரட் தூள் - 1 கப்
  5. இஞ்சி பூண்டு விழுது - 2டீஸ்பூன்
  6. தயிர் - 1 கப்
  7. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  8. உப்பு - 1 டீஸ்பூன்
  9. மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
  10. பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
  11. கேசரி கலர் - சிறிதளவு
  12. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் தயிர், இஞ்சிபூண்டு விழுது,மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.
  2. பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்
  3. பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  5. பின்னர் வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி,எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  6. பின் பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைப்பழ சாற்றை பிழிந்தும் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்