Home / Videos / Broken wheat Adai

668
0
0.0(0)
0

Broken wheat Adai

Dec-24-2018
Wajithajasmine Raja mohamed sait
150 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broken wheat Adai RECIPE

உடைத்த கோதுமை அடை

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. உடைத்த கோதுமை -1 கப்
  2. கடலைப்பருப்பு -1/4 கப்
  3. துவரம் பருப்பு -1/4 கப்
  4. உளுந்து -1/4 கப்
  5. பாசிப்பருப்பு - 1/4 கப்
  6. பெருஞ்சீரகம் -1தேக்கரண்டி
  7. வெங்காயம் -1பொடியாக நறுக்கியது
  8. பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
  9. மல்லி இலை -சிறிதளவு
  10. இஞ்சி -சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
  11. கருவேப்பிலை -சிறிதளவு
  12. உப்பு-தேவையான அளவு
  13. எண்ணெய்-தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்:
  2. 1/4 கப் கடலைப்பருப்பு,1/4 கப் உளுந்து ,1/4 கப் பாசிப்பருப்பு ,1/4 கப் துவரம்பருப்பு சேர்த்து கழுவி 2மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. அதேபோல் உடைத்த கோதுமையையும் 2மணி நேரம் ஊற வைக்கவும் .
  4. ஊற வைத்த உடைத்த கோதுமையை மிக்சியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அரைத்த கோதுமை விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
  6. ஊற வைத்த பருப்புடன் 1தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்துக்கொள்ளவும்.
  7. அரைத்த பருப்பு விழுதை கோதுமை விழுதுடன் சேர்க்கவும்.
  8. இதனுடன் 1பொடியாக நறுக்கிய வெங்காயம் ,சிறிதளவு மல்லி இலை,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி,கருவேப்பிலை சேர்க்கவும்.
  9. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  10. உப்பு சேர்த்தவுடன் மாவை நன்கு கலந்து விடவும். இப்பொழுது அடை மாவு தயார்.
  11. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் 1கரண்டி மாவை எடுத்து அடை போல் ஊற்றவும்.
  12. ஒரு கரண்டியால் தேவையான அளவு எண்ணெயை சுற்றி ஊற்றவும்.
  13. ஒரு பக்கம் அடை நன்கு வெந்ததும் கரண்டியால் திருப்பி மறு பக்கம் வேகவிடவும்.
  14. இரண்டு பக்கமும் நன்குவெந்ததும் அடுப்பில் இருந்து எடுத்துதட்டுல் வைக்கவும்.
  15. சுவையான ஆரோக்கியமான உடைத்த கோதுமை அடை தயார்.சட்னி மற்றும் வெல்லத்துடன் பரிமாறவும்.
  16. உடைத்த கோதுமை அடை

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE