Home / Videos / Minced meat Idiyappam Biryani

77
0
0.0(0)
0

Minced meat Idiyappam Biryani

Dec-27-2018
Wajithajasmine Raja mohamed sait
30 minutes
Prep Time
40 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Minced meat Idiyappam Biryani RECIPE

மட்டன் கொத்துக்கறி இடியாப்ப பிரியாணி

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசிமாவு -2 கப்
  2. மட்டன் கொத்திக்கறி -150 கிராம்
  3. வெங்காயம் -1 நீளவாக்கில் நறுக்கியது
  4. தக்காளி -2 பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் -2
  6. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  7. மல்லி இலை - சிறிதளவு
  8. பட்டை -1
  9. ஏலக்காய் -3
  10. கிராம்பு -4
  11. முந்திரி -4
  12. நெய் - 4 தேக்கரண்டி
  13. எண்ணெய் -1 தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  15. மிளகாய் தூள் -1 1/2 தேக்கரண்டி
  16. மல்லித்தூள் -1 தேக்கரண்டி
  17. கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
  18. எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
  19. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. மட்டன் கொத்துக்கறி இடியாப்ப பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
  2. ஒரு பாத்திரத்தில் 2கப் அரிசிமாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும் .
  3. சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை கிளறிக்கொள்ளவும்.
  4. இடியாப்ப மாவு தயார்.
  5. இடியாப்ப அச்சில் மாவை சேர்த்து இட்லித்தட்டில் பிழிந்து கொள்ளவும்.
  6. இட்லி பாத்திரத்தில் தட்டை வைத்து மூடி 5-7 நிமிடங்கள் வேகவிடவும்.
  7. இப்பொழுது இடியாப்பம் தயார்.
  8. சூடு ஆறியதும் இட்லித்தட்டில் இருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
  9. இடியாப்பத்தை உதிரியாக உதிர்த்து விடவும்.
  10. அடுப்பில் கடாயை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் 2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  11. பட்டை1,ஏலக்காய்3,கிராம்பு4,முந்திரி 4 சேர்த்து வதக்கவும்.
  12. நீளவாக்கில் நறிக்கிய 1 வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  13. வெங்காயம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  14. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  15. பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.
  16. பொடியாக நறுக்கிய 2 தக்காளியை சேர்க்கவும்.
  17. தக்காளி நன்கு மசித்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  18. பச்சை மிளகாய் 2,மல்லி இலை சிறிதளவு சேர்த்து வதக்கவும்.
  19. 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள், 1 1/2 தேக்கரண்டி மிளகாய்தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்க்கவும்.
  20. 1/2 தேக்கரண்டி கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
  21. இப்பொழுது 150 கிராம் மட்டன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும்.
  22. மட்டனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  23. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்துக்கறியை்வேகவிடவும்.
  24. உப்பு பார்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
  25. மூடி வைத்து 15 -20 நிமிடங்கள் நன்கு வேகவிடவும்.
  26. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
  27. இப்பொழுது உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்க்கவும்.
  28. கரண்டியால் நன்கு இடியாப்பத்தை கொத்துக்கறியுடன் கலந்து விடவும்.
  29. 1 தேக்கரண்டி நெய் சிறிதளவு மல்லி இலை சேர்க்கவும்.
  30. அடுப்பில் இருந்து இறக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
  31. சுவையான மட்டன் கொத்துக்கறி இடியாப்ப பிரியாணி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE