Home / Videos / Wheat flour Puttu

510
0
0.0(0)
0

Wheat flour Puttu

Dec-28-2018
Wajithajasmine Raja mohamed sait
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat flour Puttu RECIPE

கோதுமை மாவு புட்டு

Recipe Tags

  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு -1 கப்
  2. தேங்காய் துருவல் -1/2 கப்
  3. உப்பு -தேவையான அளவு

Instructions

  1. கோதுமை மாவு புட்டு செய்ய தேவையான பொருட்கள் :
  2. அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் 1 கப் கோதுமை மாவை சேர்த்து நன்குவாசம் வரும் வரை வறுக்கவும்.
  3. மாவு ஒட்டாமல் மணல் போல் வரும் வரை வறுக்கவும்.
  4. ஒரு பாத்திரத்திற்கு மாவை மாற்றி நன்கு ஆறவிடவும்.
  5. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  6. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பிசைந்து கொள்ளவும்.
  7. மாவை எடுத்து கையால் பிடித்து பின்பு உதிர்த்தால் மாவு உதிரவேண்டும்.அது தான் புட்டு மாவு பதம்.
  8. இப்பொழுது பிசைந்த மாவை மிக்சியில் சேர்த்து கட்டி இல்லாமல் ஒரு முறை அரைத்துக்கொள்ளவும்.
  9. அரைத்த மாவை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.
  10. இப்பொழுது மாவுடன் அரைகப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  11. ஒரு குழிக்கண்டியில் மாவை எடுத்து நன்கு அழுத்திக்கொள்ளவும்.பின்பு இலேசாக கையில் தட்டி குழிபோல் அச்சு எடுத்துக்கொள்ளவும்.
  12. இட்லித்தட்டில் தட்டிய மாவை வைக்கவும்.
  13. இதுபோல் மாவை தட்டி இட்லி தட்டில் வைத்து 7-10 நிமிடங்கள் வேகவிடவும்.
  14. 10 நிமிடங்கள் கழித்து திறந்து இட்லி தட்டை எடுக்கவும்.
  15. வெந்த புட்டை தட்டிற்கு மாற்றி தேங்காய் துருவல் சேர்க்கவும்.
  16. சுவையான கோதுமை மாவு புட்டு தயார்.
  17. சர்க்கரை மற்றும் வாழைப்பழத்துடன் புட்டை பரிமாறவும்.
  18. கோதுமை மாவு புட்டு
  19. கோதுமை மாவு புட்டு

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE