Home / Videos / Mutton Kola Urundai / Minced Meat Balls

87
0
0.0(0)
0

Mutton Kola Urundai / Minced Meat Balls

Jan-24-2019
Wajithajasmine Raja mohamed sait
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton Kola Urundai / Minced Meat Balls RECIPE

மட்டன் கோலா உருண்டை

Recipe Tags

  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 3

  1. மட்டன் கொத்துக்கறி -200 கிராம்
  2. பொரிகடலை மாவு 2-3 தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  6. மல்லி இலை -சிறிதளவு
  7. கருவேப்பிலை -சிறிதளவு
  8. வெங்காயம் -சிறிதளவு
  9. அரைக்கத்தேவையான பொருட்கள் :
  10. பட்டை -1 சிறியதுண்டு
  11. ஏலக்காய் -2
  12. கிராம்பு -3
  13. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  14. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  15. மிளகு -1/2 தேக்கரண்டி
  16. சின்ன வெங்காயம் -5-6
  17. பச்சை மிளகாய் -2
  18. உப்பு - தேவையான அளவு
  19. எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

Instructions

  1. மட்டன் கோலா உருண்டை செய்ய தேவையான பொருட்கள்
  2. அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் 200 கிராம் மட்டன் கொத்திக்கறி,மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி ,மிளகாய் தூள் 3/4 தேக்கரண்டி சேர்க்கவும்
  3. கறியை நன்கு கலந்து விடவும்.
  4. இதனுடன் 1தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொத்துக்கறியை நன்குவேகவிடவும்.
  6. மிக்சியில் பட்டை 1சிறிய துண்டு, ஏலக்காய்2,கிராம்பு 3, சீரகம் ,பெருஞ்சீரகம் ,மிளகு தலா 1/2 தேக்கரண்டி ,சின்ன வெங்காயம் 6,பச்சை மிளகாய் 2 சேர்க்கவும்.
  7. நன்கு அரைந்துக்கொள்ளவும்.
  8. தண்ணீர் வற்றி கறி நன்கு வெந்ததும் அதனுடன் அரைத்த விழுதைசேர்த்து சிறிது நேரம் நன்கு கிளறவும்.
  9. அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
  10. மிக்சியில் வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  11. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை,கருவேப்பிலை ,பொரிகடலை மாவு 2-3 தேக்கரண்டி,உப்பு சேர்க்கவும்
  12. நன்கு கையினால் பிசைந்து விடவும்.
  13. இப்பொழுது கோலா உருண்டை செய்ய அரைத்த மட்டன் விழுது தயார்
  14. சிறிதளவு மட்டன் விழுதை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  15. அடுப்பில் கடாயை வைத்து பொரிக்கத்தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டையை சேர்த்து பொரிக்கவும்.
  16. இரண்டு பக்கமும் நன்கு வெந்து ப்ரவுனாக வரும் வரை பொரிக்கவும்.
  17. இப்பொழுது அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  18. மற்ற உருண்டைகளையும் இதே போல் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
  19. சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.
  20. மட்டன் கோலா உருண்டை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE