Home / Recipes / Sweetcorn Coconut Agar Agar

Photo of Sweetcorn Coconut Agar Agar by Ayesha Ziana at BetterButter
441
5
0.0(0)
0

Sweetcorn Coconut Agar Agar

Oct-12-2017
Ayesha Ziana
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sweetcorn Coconut Agar Agar RECIPE

ஸ்வீட்கார்ன் மற்றும் தேங்காய் சேர்த்து செய்த க்ரன்ச் வகை அகர்அகர் புட்டிங்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஸ்வீட்கார்ன் (வேக வைத்தது) 150 கிராம்
  2. துருவிய தேங்காய் 150 கிராம்
  3. அகர்அகர் துண்டுகள் 10 கிராம்
  4. கருப்பட்டி 100 முதல் 150 கிராம்
  5. சீனி(தேவைப்பட்டால்) 50 கிராம்
  6. தண்ணீர் 900 மில்லி முதல் 1 லிட்டர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கருப்பட்டி மற்றும் சீனி சேர்த்துக் கொதிக்க விடவும்(சீனி வேண்டாம் எனில் கருப்பட்டி 150 கிராம் சேர்க்கவும், சீனி சேர்த்தால் கருப்பட்டி 100 கிராம் போதும்). நன்றாக உருகியதும் அடுப்பை அணைத்து, கலவையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் 800 முதல் 900 மில்லி தண்ணீர் சேர்த்து, சூடானதும் அகர் அகர் துண்டுகளைச் சேர்க்கவும். கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  3. அகர்அகர் நன்றாகக் கரைந்ததும், வடிகட்டி வைத்த கருப்பட்டி சீனி கலவையை அதனுடன் ஊற்றி உத்தேசம் 5 நிமிடம் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
  4. பின் துருவிய தேங்காய் மற்றும் வேக வைத்த ஸ்வீட்கார்ன் சேர்த்துக் கிளறி கொண்டே இருக்கவும்.
  5. கலவை லேசாக இறுகியதும் அடுப்பை அணைத்து மோல்டுகளில் ஊற்றி வைக்கவும். சற்று நேரத்திலேயே புட்டிங் கெட்டியாகி விடும். கார்னும் தேங்காயும் அடியில் தங்கிவிடும்.
  6. நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைத்துப் பின்னர் துண்டுகளாக்கிப் பரிமாறவும். மிகவும் சுவையான க்ரஞ்சியான அகர் அகர் புட்டிங் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE