Home / Recipes / Samba rice flour roti & kozhukattai

Photo of Samba rice flour roti & kozhukattai by Asiya Omar at BetterButter
1244
5
0.0(0)
0

Samba rice flour roti & kozhukattai

Nov-28-2017
Asiya Omar
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Samba rice flour roti & kozhukattai RECIPE

சம்பா அரிசி என்றால் சிவப்பரிசி தான். அதனை மாவாக இடித்து,வறுத்து வைத்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும.இதனை உபயோகித்து ரொட்டி,கொழுகட்டை,புட்டு செய்து அசத்தலாம் .

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. ரொட்டி செய்ய -சம்பா அரிசி வறுத்த மாவு( தேங்காய் போட்டு) - 1 கப்
  2. விரும்பினால் தேங்காய்த்துருவல் - கால் கப்
  3. உப்பு,நெய் - தேவைக்கு
  4. கொழுக்கட்டை செய்ய :
  5. சம்பா அரிசி வறுத்த மாவு - 1 கப்
  6. வெங்காயம் நறுக்கியது - 2 மேஜைக்கரண்டி
  7. துருவிய தேங்காய் - 2 மேஜைக்கரண்டி
  8. பொடியாக நறுக்கிய மிளகாய் -1
  9. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - தலா 1 மேஜைக்கரண்டி
  10. உப்பு - தேவைக்கு.

Instructions

  1. முதலில் ரொட்டி செய்ய கொதிக்கும் நீரை தேவைக்கு மாவில் கொட்டி சுவைக்கு உப்பு சேர்த்து ஊற விட்டு நன்கு கையால் குழைக்கவும்.
  2. குழைத்த ரொட்டியை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.பிரித்த உருண்டையில் இரண்டு எடுத்து நடுவில் நெய் தடவி வட்டமாக கையாலும் தட்டலாம். தட்ட வரவில்லை என்றால் ஒரு ஈரத்துணியை தட்டில் விரித்து அதன் மேல உருண்டைகளைச் சேர்த்து வைத்து கையால் வட்டமாக பரத்தி எடுத்து சூடான தோசைக் கலத்தில் போடவும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் ரொட்டியை எடுத்து சிறிது தண்ணீர் தெளித்து நெய் தடவி பரிமாறவும்.
  3. சூடான சம்பா அரிசி மாவு ரொட்டி தயார்.
  4. தேங்காய்ச்சட்னி, பிடித்த குழம்பு வகையுடன் பரிமாறலாம்
  5. கொழுக்கட்டை செய்ய மாவுடன் நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,மல்லி கருவேப்பிலை,தேங்காய்த் துருவல் ,உப்பு தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து விரவி வைக்கவும். கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்.
  6. சிறிது ஊறியதும் இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுக்கவும்.
  7. சூடான சுவையான சத்தான சம்பா அரிசி மாவு ரொட்டி & கொழுக்கட்டை தயார். சட்னி,சாம்பார் அல்லது குழம்புடன் பரிமாறவும். காலை இரவு நேர டிபனாகப் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE