Home / Recipes / Rasagulla

Photo of Rasagulla by saranya sathish at BetterButter
620
2
0.0(0)
0

Rasagulla

Dec-08-2017
saranya sathish
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் – 1 லிட்டர்
  2. எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
  3. சர்க்கரை – 400 கிராம்
  4. மைதா – 25 கிராம்
  5. ரோஸ் எசன்ஸ் – 2, 3 துளிகள்
  6. தண்ணீர் – 2 லிட்டர்

Instructions

  1. ஒரு பெரிய பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, நன்றாகக் கொதிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சேர்த்து கலக்கவும்.
  2. உடனே பால் திரிந்துவிடும். இந்தப் பாலை, ஒரு மெல்லிய துணியில் கொட்டி அதை ஒருமுறை தண்ணீரில் கழுவி தொங்கவிடவும்.
  3. இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் வடிந்த பன்னீரை மட்டும் எடுத்து மைதா சேர்த்து 15 நிமிடம் நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  4. சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி நன்றாகக் கொதிக்கும் போது ஒரு டேபிள்ஸ்பூன் பாலை விடவும். அழுக்கு இருந்தால் நுரைத்துக் கொண்டு மேலே வரும். அதை நீக்கவும்.
  5. பின் ரோஸ் எசன்ஸ் சேர்த்து பன்னீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக அதில் போடவும். 5 நிமிடங்கள் கொதித்த பிறகு அதில் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விடவும். இப்போது கொதி அடங்கி மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்.
  6. மீண்டும் ஒரு கரண்டி குளிர்ந்த நீர் விட்டு கொதிக்கவிடவும். இப்படியே 5 முறை செய்யவும். ரசகுல்லாக்கள் நன்றாக ஊறி மேலே வந்திருக்கும்.
  7. இப்போது அடுப்பிலிருந்து இறக்கி ரசகுல்லாக்களை ஆரவைத்து பின் ஃபிரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE