Home / Recipes / All in One Veg Biriyani

Photo of All in One Veg Biriyani by Sowmya Sundar at BetterButter
449
2
0.0(0)
0

All in One Veg Biriyani

Dec-18-2017
Sowmya Sundar
30 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Fusion
  • Pressure Cook
  • Main Dish

Ingredients Serving: 5

  1. சீரகசம்பா அரிசி - 2 கப்
  2. வெங்காயம் -3 (நீள வாக்கில் நறுக்கவும்)
  3. தக்காளி-1
  4. குடை மிளகாய் -1
  5. புதினா - 1/4 கப்
  6. பீன்ஸ்- 50 கிராம்
  7. காரட் - 2
  8. உருளைக்கிழங்கு- 1
  9. பேபி கார்ன் - 3
  10. பச்சை பட்டாணி - 1/4 கப்
  11. தேங்காய் துருவல்-1/2 கப்
  12. எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
  13. நெய் 2 டேபிள் ஸ்பூன்
  14. சர்க்கரை - 1/2 டீ ஸ்பூன்
  15. உப்பு
  16. தண்ணீர் - 3 கப்
  17. பிரட் ரஸ்க் - 8
  18. கொத்தமல்லி தழை சிறிது
  19. மசாலா அரைக்க:
  20. இஞ்சி - 2 துண்டு
  21. பூண்டு- 8 பல்
  22. பச்சை மிளகாய்- 5
  23. பட்டை - 1 துண்டு
  24. கிராம்பு- 6
  25. ஏலக்காய்- 2
  26. சிறிது வெங்காயம்
  27. கசகசா - 2 டீஸ்பூன்
  28. கரம் மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்

Instructions

  1. அரிசியை தண்ணீரில் களைந்து விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும்
  2. காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்.
  3. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  4. தேங்காயை அரைத்து பால் 1 கப் எடுத்து கொள்ள வேண்டும்.
  5. குங்கும பூவை 1 டடேபிள்ஸ்பூன் பாலில் ஊற வைக்கவும்
  6. ஒரு கடாயில் நெய் விட்டு அரிசியை சிறிது நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் சிறிது நெய் சேர்த்து சிறிது வெங்காயம் வறுத்து கொள்ளவும். பின் ரஸ்க் நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
  7. பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை,முந்திரி பருப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மற்ற காய்கறிகள் மற்றும் புதினா சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
  8. காய் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் ,அரிசி ,குங்கும பூ சேர்த்து குக்கரில் 2 விசில் வரை மிதமான தீயில் வைத்து வேக விடவும் .
  9. பின்னர் குக்கர் திறந்து வதக்கி எடுத்து வைத்த வெங்காயம்,ரஸ்க் மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்
  10. சுவையான பிரியாணி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE