Home / Recipes / Veg Dalcha

Photo of Veg Dalcha by Asiya Omar at BetterButter
1909
3
5.0(1)
0

Veg Dalcha

Dec-26-2017
Asiya Omar
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes

Ingredients Serving: 8

  1. துவரம் பருப்பு -100 கிராம்
  2. கடலை பருப்பு -50 கிராம்
  3. (துவரம் பருப்பு மட்டும் கூட சேர்க்கலாம்)
  4. கத்திரிக்காய் -1/4 கிலோ
  5. வெண் பூசணி அல்லது சுரைக்காய்- 100- 150கிராம்(ஒரு துண்டு)
  6. மாங்காய் -1
  7. பெரிய வெங்காயம் -1
  8. பெரிய தக்காளி -1
  9. பச்சை மிளகாய் -3
  10. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  11. வீட்டு பொது மசாலா -2-:3 தேக்கரண்டி
  12. அல்லது தனியாக மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி,
  13. மல்லித்தூள் -2 தேக்கரண்டி
  14. சீரகம்,பெருஞ்சீரத்தூள் - தலா அரை தேக்கரண்டி
  15. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி(ஏலம்,பட்டை,கிராம்பு)
  16. புளி - சிறிய எலுமிச்சை அளவு
  17. உப்பு - சுவைக்கு
  18. மல்லி,கருவேப்பிலை - சிறிது.
  19. தாளிக்க:-
  20. எண்ணெய் -1-2 மேஜைக்கரண்டி
  21. கடுகு,உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  22. காய்ந்த மிளகாய் வற்றல் -2
  23. கறிவேப்பிலை - 2 இணுக்கு.

Instructions

  1. முதலில் பருப்பை களைந்து கால்- அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் ஊறிய பருப்புடன்,மஞ்சள் தூள்,தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஆவி வந்தவுடன்,வெயிட் போட்டு 2 விசில் விட்டு அணைக்கவும்.
  2. குக்கரின் ஆவியடங்கியவுடன் திறந்து அதில் நறுக்கிய கத்திரிக்காய், வெண்பூசணி அல்லது சுரைக்காய்,வெங்காயம்,தக்காளி,மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது,மசாலா வகைகள்,உப்பு,புளித்தண்ணீர் சேர்க்கவும்.கொதி வரவும் மூடவும்.
  3. மாங்காய் நறுக்கி இத்துடனும் சேர்க்கலாம்,இல்லை எனில் தனியாக பக்குவமாக வெந்தும் சேர்க்கலாம்.
  4. ஒரிரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  5. இனி தாளிக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு வற்றல்,கறிவேப்பிலை, சேர்த்து பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க,விரும்பினால் இரு பின்ச் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி குக்கரில் உள்ள வெந்த பருப்பு காய்கறிகள் தால்ச்சாவில் கொட்டவும்.
  6. கலந்து விடவும். சுவையான வெஜ் தால்ச்சா தயார். பக்க உணவாகப் பரிமாறவும். பொதுவாக எங்கள் ஊரில் இப்படி மட்டன் போடாமல் சிம்பிளாக தால்ச்சா செய்வதே வழக்கம்.மட்டன் வேண்டுமானால் மசாலா சேர்த்து வெந்தும் சேர்க்கலாம்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Ravi Chandran
Oct-10-2018
Ravi Chandran   Oct-10-2018

What is veetu podhu masala? Nice...

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE