Home / Recipes / Small onion Araicha Sambar

Photo of Small onion Araicha Sambar by Krishnasamy Vidya Valli at BetterButter
64
3
0.0(0)
0

Small onion Araicha Sambar

Dec-28-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. சின்ன வெங்காயம் - 20 முதல் 25
  2. தக்காளி - 1 (பெரியது )
  3. துவரம்பருப்பு - 1 / 4 கப்
  4. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  5. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  6. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  7. எண்ணெய்-2தேக்கரண்டி
  8. வறுப்பதற்கு தேவையானவை
  9. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி விதை - 2 1/4 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 1 சிட்டிகை
  13. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  14. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  15. சீரகம் - 2 சிட்டிகை
  16. மிளகு - 4
  17. மிளகாய் வத்தல் - 4
  18. எண்ணெய் - 1 / 2 தேக்கரண்டி
  19. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  20. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  21. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  22. மிளகாய் வத்தல் - 2
  23. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  24. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-2தேக்கரண்டி

Instructions

  1. சின்ன வெங்காயத்தை தோல்சீவி பெரிதாக இருந்தால் இரண்டாக நறுக்கிவைக்கவும். புளியை ஊறவைக்கவும் துவரம்பருப்பை வெந்நீரில் பதினைந்துநிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக வேக வைக்கவும்
  3. கடாயில் வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போடவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்ச வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. வதக்கியதில் ஒரு கரண்டி எடுத்து வறுத்ததுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு ஆற வைக்கவும்
  6. சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  7. ஏற்கனவே வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியில் உப்பு மஞ்சள் பொடி மற்றும் புளியை கரைத்து சேர்க்கவும்
  8. பச்ச வாசனை போனவுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும்
  9. வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும்
  10. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான சின்ன வெங்காய அரைச்ச சாம்பார் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE