Home / Recipes / Instant dahi vegetable dosai

Photo of Instant dahi vegetable dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
419
6
0.0(0)
0

Instant dahi vegetable dosai

Mar-03-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Instant dahi vegetable dosai RECIPE

அவசரத்திற்கு எளிதில் செய்யும் டிபன் வெரைட்டி இது. தோசை மாவு தீர்ந்தபிறகு தோசை கேட்கும் குழந்தைகளுக்கு காய்கள் சேர்த்து இந்த தோசை செய்து கொடுக்கலாம். மாவு புளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக வார்க்கலாம். ஒருவருக்கு இரண்டு தோசை வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. தயிர் -1 கப் (கெட்டி தயிரில் 1/2 கப் தண்ணீர் கலந்து நன்றாக கடைந்து கொள்ளவும்)
  2. கோதுமை மாவு -1/4 கப்
  3. ரவை, அரிசி மாவு, ஓட்ஸ்,அவல் -தலா 1/8 கப்
  4. கடலைமாவு -2 தேக்கரண்டி
  5. உப்பு -11/2 தேக்கரண்டி
  6. மிளகு சீரகப்பொடி -1 தேக்கரண்டி
  7. பச்சமிளகாய் -1
  8. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  9. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -4 சிட்டிகை
  11. இஞ்சி -1 சிறிய துண்டு (விருப்பப்பட்டால்)
  12. தக்காளி -1
  13. வெங்காயம் -1
  14. கேரட் -1
  15. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. ஓட்ஸ் மற்றும் அவலை மிக்ஸியில் திரிக்கவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட எல்லா மாவுகளையும் எடுத்துக்கொள்ளவும்
  3. தயிர் உப்பு மிளகு சீரகப்பொடி பெருங்காயம் எல்லாம் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். தோசை மாவு பதம் வருவதற்கு தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்
  4. பச்ச மிளகாய் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி வெங்காயம் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்
  5. மாவுக்கலவையில் நறுக்கியதை சேர்த்து கலக்கவும்.
  6. தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசை வார்த்து எடுக்கவும்
  7. தேங்காய் சட்னி/சாம்பார் உடன் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE