Home / Recipes / vegetable rice

Photo of vegetable rice by Ramya Kannan at BetterButter
476
3
0.0(0)
0

vegetable rice

Mar-17-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 6

  1. கைக்குத்தல் அரிசி-1 கப்
  2. துவரம் பருப்பு-1/4 கப்
  3. கேரட்-1
  4. பீன்ஸ்-4
  5. வாழைக்காய் -1
  6. உருளை-1
  7. கத்திரிக்காய்-2
  8. அவரைக்காய் -2
  9. கொத்தவரங்காய் -2
  10. முருங்கைக்காய் -1
  11. மாங்காய் - 4 துண்டுகள்
  12. பெரிய வெங்காயம்-1
  13. சின்னவெங்காயம்-5
  14. புளி- ஒரு எலுமிச்சை அளவு
  15. வடகம் -2 தாளிக்க
  16. கறிவேப்பிலை-,சிறிது
  17. பெருங்காயம்- 1 டீஸ்பூன்
  18. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  19. கடுகு உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  20. எண்ணெய்- தேவையான அளவு
  21. அரைக்க:
  22. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  23. மிளகாய் வத்தல்-6
  24. பூண்டு-4 பல்
  25. ஜீரகம்- 1 டீ ஸ்பூன்

Instructions

  1. கைக்குத்தல் அரிசியை 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  2. குக்கரில் அல்லது ஒரு வாயகன்ற கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்ததும் அதில் துவரம் பருப்பு சேர்த்து வேகவிடவும் 1/2 வேக்காடு வெந்த உடன் அதில் கைக்குத்தல் அரிசியை சேர்த்து வேகவிடவும்
  3. அரிசி வெந்து கொண்டிருக்கும் போதே வெங்காயம் தவிர அனைத்து காய்களையும் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.புளி கரைசல் சேர்க்கவும்
  4. மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. நன்றாக வெந்த உடன் அரைத்த தேங்காய் மசாலா விழுதை சேர்க்கவும்
  6. அரிசி பருப்பு காய்கறிகள் அனைத்தும் நன்றாக வெந்தவுடன் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மற்றும் வடகம் சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்
  8. நன்றாக வதங்கிய பின்னர் அந்த கலவையை சாதத்துடன் சேர்த்து விட்டு நன்றாக கிளறி இறக்கவும்
  9. சுவையான பாரம்பரிய கூட்டான்சோறு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE