Home / Recipes / Greek pan cake

Photo of Greek pan cake by Adaikkammai Annamalai at BetterButter
371
7
0.0(0)
0

Greek pan cake

Apr-09-2018
Adaikkammai Annamalai
20 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Greek pan cake RECIPE

பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம். செய்முறை மற்றும் டாப்பிங் மாறுபட்டாலும், பான்கேக்குகள் உலகம் முழுவதுமே பிரபலமான, ருசியான ஒரு உணவுப்பண்டமாகும்,

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Greek
  • Blending
  • Steaming
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா மாவு - 2 கப்
  2. முட்டை - 2
  3. பால் - 1 1/2 கப்
  4. பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
  5. வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  6. மேலே குறிப்பிட்ட இந்த பொருட்களை வைத்து, 10 அளவுள்ள பான்கேக்குகள் தயாரிக்கலாம்

Instructions

  1. ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள். பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் சிறிது பாலையும் சேர்த்து கலக்காமல் வைக்க வேண்டும்
  2. பிறகு மைக்ரோவேவ் கிண்ணத்தில் வெண்ணையை போட்டு, மைக்ரோவேவ்வில் உருக்குங்கள். வெண்ணெய் நன்கு உருகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 1 நிமிடம் வைத்தால் போதும்
  3. இப்போது வெண்ணையையும் பாலையும், அந்த மாவு கலவையோடு சேர்த்து நன்கு கலக்குங்கள். ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும். அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும்.
  4. பிறகு ஒரு தட்டையான நான்ஸ்டிக் பேன் அடுப்பில் வைத்து, நன்கு சூடேற்ற வேண்டும். பான்கேக் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நான்ஸ்டிக் ஸ்ப்ரே அல்லது வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும்
  5. பான் நன்கு சூடேறிவிட்டதா என்று அறிய சிறிது நீரை சுண்டிப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். எப்படியெனில் நீரை தெளிக்கும் போது நீர் தெறிக்க ஆரம்பிக்கும்
  6. இப்போது 3 டேபிள் ஸ்பூன் அல்லது கால் கப் மாவை எடுத்து பேனில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும். முதலில் குறைந்த அளவு மாவை பயன்படுத்துவது நல்லது. பின்னர் போகப் போக பெரிதாக ஊற்றிக் கொள்ளலாம்
  7. அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும்
  8. அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் அனைத்து பான்கேக்குகளையும் செய்ய வேண்டும்.
  9. இதோ சுவையான பான் கேக் தயார்!!! வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்,
  10. நான் ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லட் , தேன் வைத்து தொப்பிங் செய்துள்ளேன்
  11. சுவையான க்ரீக் பான் கேக் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE