Home / Recipes / Chicken Salna

Photo of Chicken Salna by விருதை சமையல் at BetterButter
283
3
0.0(0)
0

Chicken Salna

May-14-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 3

  1. கோழிக்கறி - 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. மிளகாய்த்தூள் -  2 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லித்தழை - சிறிது
  11. அரைக்க:
  12. தேங்காய் சில் - 2
  13. மல்லி விதை - 1/2 தேக்கரண்டி
  14. கசகசா - 1/2 தேக்கரண்டி
  15. சீரகம் - 1/2 தேக்கரண்டி 
  16. மிளகு - 10
  17. முந்திரி பருப்பு - 6 அல்லது 7

Instructions

  1. கறியை சுத்தம் செய்து வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
  2. அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மை போல் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  3. குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  5. பின் கறியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  7. ஐந்து நிமிடம் வதக்கிய பின் 2- 3 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
  8. குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  9. இரண்டு விசில் வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  10. சூடான சுவையான கோழி சால்னா தயார்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE