Home / Recipes / Chicken dum Biryani

Photo of Chicken dum Biryani by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
512
6
0.0(0)
0

Chicken dum Biryani

May-15-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • South Indian
  • Main Dish

Ingredients Serving: 4

  1. சிக்கன் -1/2 கிலோ
  2. சீரகசம்பா அரிசி -1/2 கிலோ
  3. வெங்காயம் -3 நீளமாக நறுக்கியது
  4. தக்காளி -2 நறுக்கியது
  5. பச்சை மிளகாய் -2
  6. தயிர்-3 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள்-1 தேக்கரண்டி
  10. பிரியாணி மசாலா - 1 1/2 தேக்கரண்டி
  11. மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
  12. பட்டை -1
  13. ஏலக்காய் -4
  14. கிராம்பு -4
  15. பிரியாணி இலை -1
  16. அன்னாசி பூ-2
  17. பெருஞ்சீரகம் -1/2 தேக்கரண்டி
  18. மல்லி இலை - சிறிதளவு
  19. புதினா - சிறிதளவு
  20. நெய்-3 தேக்கரண்டி
  21. எண்ணெய் - 2-3 தேக்கரண்டி
  22. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. முதலில் சிக்கனை நன்கு கழுவி அதனுடன் தயிர்,2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,பிரியாணி மசாலா,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  2. சீரகசம்பா அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து அதில்3 தேக்கரண்டி நெய் ,2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை,ஏலக்காய் ,பெருஞ்சீரகம் ,கிராம்பு,பிரியாணி இலை,அன்னாசி பூ சேர்த்து வதக்கவும் .பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிற மாக வதக்கவும் .
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மீதமுள்ள 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் .பின்பு அதனுடன் நறுக்கிய தக்காளி ,புதினா,மல்லி இலை ,சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .
  5. இப்பொழுது இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும் .
  6. பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.(1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் சேர்க்கவும் )
  7. நன்கு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்து வேகவிடவும்.(உப்பு தேவை எனில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.)
  8. தண்ணீர் முக்கால்அளவு வற்றி அரிசி முக்கால் பதம் வெந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும் .
  9. இப்பொழுது அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும் .
  10. பாத்திரத்தை அலுமினியம் பாயிலால் மூடவும் .
  11. அதன்மேல் மூடியை வைத்து மூடி ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி மூடியின் மேல் வைத்து10- 15 நிமிடங்கள் மிதமான தீயில் தம்மில் வைக்கவும் .
  12. 15 நிமிடங்கள் கழித்து சுவையான சிக்கன் தம் பிரியாணி தயார் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE