எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் | Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast in Tamil

எழுதியவர் Tanushree Bhowmik  |  10th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast by Tanushree Bhowmik at BetterButter
எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்Tanushree Bhowmik
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  0

  மக்கள்

243

0

எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் recipe

எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast in Tamil )

 • தேங்காய் துருவல் 1/4 கப்
 • ஜாதிக்காய் ¼ தேக்கரண்டி
 • கிராம்பு 5-6
 • பச்சை ஏலக்காய் 3-4 பற்கள்
 • இஞ்சி (துருவப்பட்டது) 2 தேக்கரண்டி
 • பூண்டு 4 பற்கள்
 • கறிவேப்பிலை 1 கொத்து
 • இலவங்கப்பட்டை 1 இன்ச்
 • பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் 4ல் இருந்து 5
 • மல்லி 2 தேக்கரண்டி
 • மிளகு 1 தேக்கரண்டி
 • சீரகம் 2 தேக்கரண்டி
 • தேங்காய்பால் ½ தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • செட்டிநாடு மசாலா கலவை:
 • கொத்துமல்லி இலைகள், அலங்காரத்திற்காக
 • செட்டிநாடு மசாலாப் பொடி 2 தேக்கரண்டி
 • மஞ்சள் ½ தேக்கரண்டி
 • நடுத்தர அளவுள்ள தக்காளி, துண்டாக்கப்பட்டது 2
 • இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய், நறுக்கப்பட்டது 2
 • நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது 2
 • கறிவேப்பிலை 2 கொத்து
 • உளுத்தம்பருப்பு ½ தேக்கரண்டி
 • கடுகு ½ தேக்கரண்டி
 • தேங்காய் எண்ணெய் 3-4 தேக்கரண்டி
 • பேபி உருளைக்கிழங்கு (வேகவைத்து தோலுரிக்கப்பட்டது) 500 கிராம்

எண்ணெய் உருளைக்கிழங்கு வறுவல்/செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி | How to make Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast in Tamil

 1. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைத் தாளித்துக்கொள்ளவும். கடுகு பொறிந்ததும், உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்க்கவும்.
 2. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
 3. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை ஆவியாகும்வரை வறுக்கவும்.
 4. தக்காளி சேர்த்து மசாலாவில் எண்ணெய் மிதக்கும் வரை சிறு தீயில் வறுக்கவும்.
 5. அரைத்த மசாலா, மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். சமமாகப் பூசுவதற்குக் கிண்டிகொள்ளவும்.
 6. அரை கப் தண்ணீர் சேர்த்து சாறு அடர்த்தியாகும்வரை சிறு தீயில் வேகவைக்கவும்.
 7. உருளைக்கிழங்கு சேர்த்து தீயை அதிகரித்து கிட்டத்தட்ட காய்ந்த மொறுமொறுப்பான புள்ளிகள் உருளைக்கிழங்கின் மீது தோன்றும்வரை வறுக்கவும்.
 8. தீயிலிருந்து இறக்கி நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
 9. செட்டிநாடு மசாலா கலவைக்காக: இஞ்சி, பூண்டு, தேங்காயை எண்ணெயில் வறுக்கவும்.
 10. மசாலாக்களை வெறுமனே தனித்தனியாக வறுக்கவும்.
 11. அனைத்து பொருள்களையும் கலந்து மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும்.

எனது டிப்:

மசாலாக் கலவை ஒரு மாதத்திற்கு குளிர்ச்சியான, உலர் நிலை காற்றுப்புகா பாத்திரத்தில் வைக்கலாம்.

Reviews for Ennai Urulai Kizhangu Varuval/ Chettinad Potato Roast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.