வீடு / சமையல் குறிப்பு / நாவல்பழம் கப் கேக்

Photo of Jamunfruit cup cake by Kalai Rajesh at BetterButter
233
2
0.0(0)
0

நாவல்பழம் கப் கேக்

May-31-2018
Kalai Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

நாவல்பழம் கப் கேக் செய்முறை பற்றி

பல நாட்களாக இந்த பழத்தை வைத்து கேக் செய்து பார்க்க வேண்டும் என நினைத்தேன். நினைத்ததை விட மிக அருமையாக வந்துள்ளது .. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. நாவல்பழம் அரைத்து - 1கப்
  2. மைதா - 1/2 கப்
  3. கோதுமை - 1/2 கப் மைனஸ் 2 மேசை கரண்டி
  4. மக்காசோள மாவு - 2மேசை கரண்டி
  5. சர்க்கரை - 3/4கப்
  6. வெண்ணெய் (உருக்கியது)- 1/4 கப் + 2மேசை கரண்டி
  7. பால் - 2 மேசை கரண்டி
  8. பேக்கிங் பவுடர் - 1 தேகரண்டி
  9. பேக்கிங் சோடா - 1/4தேகரண்டி
  10. உப்பு - ஒரு சிட்டிகை
  11. மேலே அலங்கரிக்க - பிஸ்தா / பாதாம்/கிரீம்

வழிமுறைகள்

  1. நாவல் பழத்தை சுத்தம் செய்து , கொ ட்டை எடுத்து விட வேணும். பின் அதனை சர்க்கரை பாலுடன் நைசாக அரைக்க வேணுடும்.
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் மாவு , பேக்கிங் பவுடர் சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்க வேண்டும்.
  3. பின் உருக்கிய வெண்ணெய் , பழ கலவையை , மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும்
  4. மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும். தூக்கி ஊற்றினால் சரியாக மடிப்புடன் விள வேண்டும்.
  5. கலவையை கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும்.
  6. இந்த கலவையை கப் கேக் பேப்பரில் 3/4 அளவு ஊற்றி. 160 c. இல் ஏற்கனவே சூடான ஓவெண்ணில் 20 -25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  7. 20 நிமிடம் மேல் , பல் குத்தும் குச்சியால் நடுவில் குற்றி பார்க்க வேண்டும் .. குச்சி சுத்தமாக வந்தால் கேக் ரெடி ஏன்று அர்த்தம்.. இல்லையேன்றால் மறுபடியும் 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
  8. வெந்த பின் அதனை வெளியே எடுத்து நன்றாக ஆரவைக்கவு.
  9. தேவைப்பட்டால் மேலே அலங்கரிக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்