கொத்தமல்லி தொக்கு | Kothamalli Thokku in Tamil

எழுதியவர் vanamala Hebbar  |  10th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kothamalli Thokku by vanamala Hebbar at BetterButter
கொத்தமல்லி தொக்குvanamala Hebbar
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

184

0

கொத்தமல்லி தொக்கு recipe

கொத்தமல்லி தொக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kothamalli Thokku in Tamil )

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி (நான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினேன்)
  • கல்லு உப்பு - சுவைக்கு
  • உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  • புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு அல்லது சாந்தைப் பயன்படுத்தவும் ( 1தேக்கரண்டி, நான் சாந்தை பயன்படுத்தினேன்)
  • மிளகாய் - 4-6 (i' பியாடகி மிளகாய் பயன்படுத்தப்பட்டது)
  • கொத்துமல்லி இலைகள் - 1 கப்

கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி | How to make Kothamalli Thokku in Tamil

  1. தண்டுகளை நறுக்கிவிட்டு கொத்துமல்லி இலைகளை நறுக்கி சுத்தப்படுத்தி நன்றாக அலசி தண்ணீரை வடிக்கட்டிவிடவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக அவை பொன்னிறமாகும்வரை வறுத்து புளி சேர்த்து 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  3. தீயிலிருந்து எடுத்து மென்மையான பவுடராக மாறுவதற்கு சற்றே ஆறவிடவும். பின்னர் பெருங்காயம் கொத்துமல்லி சேர்க்கவும் (தண்ணீர் சேர்க்கவேண்டாம்) கொத்துமல்லியிலேயே அதிகம் இருக்கும்.
  4. சாந்தாக அரைத்துக்கொள்ளவும். உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துக்கெள்ளவும்.
  5. வெளியில் எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தொக்குக் கலவையில் ஊற்றி நன்றாகக் கலக்கி கண்ணாடி ஜாரில் மாற்றிக்கொள்ளவும்.

Reviews for Kothamalli Thokku in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.