பலாப்பழ பிரியாணி | Jackfruit Biryani in Tamil

எழுதியவர் Saras Viswam  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Jackfruit Biryani  by Saras Viswam at BetterButter
பலாப்பழ பிரியாணிSaras Viswam
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

30

0

பலாப்பழ பிரியாணி recipe

பலாப்பழ பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Jackfruit Biryani in Tamil )

  • பன்னீர் - 2 தேக்கரண்டி
  • பால் - 2 தேக்கரண்டி
  • குங்குமப்பூ - கொஞ்சம்
  • புதிய புதினா இலைகள் - 22 - 26
  • கொத்துமல்லி இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது - 2 தேக்கரண்டி
  • ஏலக்காய்ப் பொடி தூவுவதற்கு - 1/4 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் தூவுவதற்கு - 2 தேக்கரண்டி
  • நெய் - 2 தேக்கரண்டி
  • இஞ்சி மெல்லியத் துண்டுகளாக நறுக்கப்பட்டது - 1 இன்ச் துண்டு
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 கப்
  • சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • உப்பு - சுவைக்கேற்றபடி
  • வெங்காயம் வறுத்தது - 1 கப்
  • கெட்டித் தயிர் - 1 1/2 கப்
  • ஷா சீரகம் - 1 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை - 1 இன்ச்
  • ஏலக்காய் - 9
  • கிராம்பு - 3-4
  • பே இலைகள் - 2
  • பாஸ்மதி அரிசி 15 நிமிடங்கள் ஊறவைக்கப்பட்டது - 1 & 1/2 கப்
  • பலாப்பழம் தோலுரிக்கப்பட்டு பெரிய துண்டுகளாக நறுக்கப்பட்டு பொறிக்கப்பட்டது - 1 சிறியது

பலாப்பழ பிரியாணி செய்வது எப்படி | How to make Jackfruit Biryani in Tamil

  1. ஒரு வானலியில் போதுமான எண்ணெயைச் சூடுபடுத்தி துண்டுகள் பொன்னிறமதாகும்வரை வறுக்கவும்.
  2. ஒரு நான்-ஸ்டிக் வானலியில் தண்ணீரை சூடுபடுத்திக்கொள்க. பே இலைகள், கருப்பு ஏலக்காய், கிராம்பு, பச்சை ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஷா சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. அரிசியை வடிக்கட்டி சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு சேர்த்துக் கலந்து பாதியளவு வேகவைக்கவும்.
  4. ஒரு ஆழமான நான்-ஸ்டிக் வானலியில் தயிர், 3/4 கப் வறுத்த வெங்காயம், சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி சீவல்கள், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 1 தேக்கரண்டி நெய், வறுத்த பலாப்பழம், 1 தேக்கரண்டி கரம் மசாலா பவுடர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  5. 1 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள், 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள், 8-10 புதினா இலைகளைச் சேர்த்து கலக்கவும். 1/4 கப் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து கலக்கவும்.
  6. குங்குமப்பூவை 2 தேக்கரண்டி கொதிநீரில் கலந்து, 2 தேக்கரண்டி பால் மற்றும் 2 தேக்கரண்டி பன்னீரைச் சேர்க்கவும். பாதி வெந்த அரிசியை வடிக்கட்டி தயிர் கலவையின் மீது பரவச்செய்யவும். ஒரு சிட்டிகை கரம் மசாலாத் தூளையும் பச்சை ஏலக்காய்த் தூளையும் தூவவும்.
  7. 7-8 புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள், மீதமுள்ள வறுத்த வெங்காயம், நெய் மற்றும் 1/2 குங்குமப்பூ பாலைச் சேர்க்கவும்.
  8. மீதமுள்ள சாதத்தை வடிக்கட்டி மேல் அடுக்குக் மேலாகப் பரவச் செய்யவும். 7-8 புதினா இலைகளையும் மீதமுள்ள குங்குமப்பூவையும் சாதத்தின் அடுக்கின் மீது பரவச்செய்யவும்.
  9. நெய் சேர்க்கவும். மூடி அதிக சூட்டில் முதல் 2 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன்பிறகு தீயைக் குறைத்து 12-15 நிமிடங்கள் அரிசி வேகும்வரை சமைக்கவும். பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி சூடாகப் பரிமாறவும்.

Reviews for Jackfruit Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.