வேம்பு ரசம் | Vepampoo Rasam (Neem Flower Rasam) in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vepampoo Rasam (Neem Flower Rasam) by Sindhu Sriram at BetterButter
வேம்பு ரசம்Sindhu Sriram
 • ஆயத்த நேரம்

  25

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

16

0

வேம்பு ரசம் recipe

வேம்பு ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Vepampoo Rasam (Neem Flower Rasam) in Tamil )

 • உலரவைத்த வேப்பம்பூ -2
 • உப்பு - சுவைக்கேற்றபடி
 • மிளகு - 1/2 தேக்கரண்டி
 • சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
 • கடகு - 1/4 தேக்கரண்டி
 • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 • கறிவேப்பிைலை - 1 கொத்து
 • காய்ந்த மிளகாய் - 2
 • நெய் - 2 தேக்கரண்டி

வேம்பு ரசம் செய்வது எப்படி | How to make Vepampoo Rasam (Neem Flower Rasam) in Tamil

 1. ஒரு கப் வெந்நீரில் 20 நிமிடங்களுக்கு புளியை ஊறவைக்கவும். சாறை பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடுபடுத்திக்கொள்ளவும். சூடானதும், கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். இப்போது கறிவேப்பிலை, பெருங்காயம், சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் விட்டுவைக்கவும்.
 3. இப்போது புளிக்கரைசலையும் உப்பையும் சேர்க்கவும். இந்தக் கலவை நன்றாக வேகட்டும், புளியின் பச்சை வாடை இல்லாமல்.
 4. மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு தீயிலிருந்து எடுத்து வைக்கவும்.
 5. இப்போது, ஒரு வானலியில் நெய்யைச் சூடுபடுத்தவும். காய்ந்த வேப்பம்பூவைச் சேர்த்து மணம் வரும்வரை வறுக்கவும். இந்த வறுத்த வேப்பம்பூவை வேகவைத்த புளிக்கலவையுடன் சேர்த்து மூடி வைக்கவும், ரசத்தைப் பரிமாறும்வரை.

எனது டிப்:

வேப்பம்பூ சேர்க்கப்பட்டதும் ரசத்தை மேலும் கொதிக்கவிடக்கூடாது.

Reviews for Vepampoo Rasam (Neem Flower Rasam) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.