வீடு / சமையல் குறிப்பு / விறால் மீன் வறுவல்

Photo of Viral meen varuval by Asiya Omar at BetterButter
2021
1
0.0(0)
0

விறால் மீன் வறுவல்

Jun-08-2018
Asiya Omar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

விறால் மீன் வறுவல் செய்முறை பற்றி

ஆறு,குளம் போன்ற நன்னீரில் வாழக்கூடியது. பத்திய மீன் சத்தானது மிகவும் சுவையானது, விலையும் அதிகம்.ருசியாக எப்படி வறுப்பது அல்லது பொரிப்பது என்று பார்ப்போம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. விறால் மீன் - 6 -8 துண்டுகள்
  2. எண்ணெய் பொரிக்க - 3 மேஜைக்கரண்டி
  3. மீனில் மசாலா பிரட்ட தேவையான பொருட்கள்:-
  4. மிளகாய்த்தூள் -ஒன்னரை தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  6. மிளகு,சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி
  7. பூண்டு நன்கு தட்டியது - 5 பல்
  8. உப்பு - தேவைக்கு.
  9. விரும்பினால் - அரை மூடி எலுமிச்சை பிழியலாம்.

வழிமுறைகள்

  1. மீன் வழு வழுவென்று இருக்கும்.சாம்பல் அல்லது உப்பு கொண்டு பிரட்டி கல்லில் உறைத்து நன்கு கழுவ வேண்டும். துண்டு போட்டு எடுக்கவும். நடு துண்டை பொரிக்க எடுக்கவும். தலை,நாடி,வால்,வயறு துண்டுகள்,சினை குழம்பில் போடவும்.
  2. மீனில் மேற்சொன்ன படி மசாலா கலந்து பிரட்டி அரை மணி நேரமாவது ஊற விடவும்.
  3. பழைய தோசைக்கலத்தை பயன்படுத்தி பொரிக்கலாம் குறைந்த எண்ணெய் தான் தேவைப்படும்
  4. கலத்தில் எண்ணெய் சூடு செய்யவும்.மசாலாவில் ஊறிய மீன் துண்டுகளைப் போடவும்.தீயைக் கூட்டி வைத்து பின்பு குறைத்து வேக விடவும்.
  5. திருப்பி பொன்னிமாக சிவற பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  6. செம ருசியான விறால் மீன் வறுவல் தயார்.மீன் குழம்பு,ரசத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்