வெற்றிலைக் குழம்பு | Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu in Tamil

எழுதியவர் Priya Satheesh  |  13th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu recipe in Tamil,வெற்றிலைக் குழம்பு, Priya Satheesh
வெற்றிலைக் குழம்புPriya Satheesh
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

36

0

வெற்றிலைக் குழம்பு recipe

வெற்றிலைக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu in Tamil )

 • 8-10 வெற்றிலை, சிறுசிறு பட்டைகளாக நறுக்கிக்கொள்ளப்பட்டது
 • 2 வெங்காயம் நடுத்தர அளவுள்ளது நறுக்கப்பட்டது
 • 10 பூண்டு பற்கள், தோல் உரிக்கப்பட்டது
 • 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
 • 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
 • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
 • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • எலுமிச்சை அளவு புளி (10 நிமிடங்கள் ஊறவைத்து, அதிலிருந்து சாறை பிழிந்து எடுக்கவும்)
 • 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் (1 தேக்கண்டி வறுப்பதற்கும் 1 தேக்கரண்டி குழம்புக்கும்)
 • 1 தேக்கரண்டி வடகம்
 • 2 கொத்து கறிவேப்பிலை

வெற்றிலைக் குழம்பு செய்வது எப்படி | How to make Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கப்பட்ட வெங்காயத்தோடு பூண்டையும் சேர்க்கவும்.
 2. ஒரு நிமிடத்திற்கு வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
 3. மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து அவற்றுடன் வறுத்த வெங்காயம் பூண்டை சேர்க்கவும்.
 4. சிறிது தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 5. மீத முள்ள 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி வடாகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
 6. அரைத்த சாந்தைச் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வதக்கி அல்லது எண்ணெய் மசாலாவிலிருந்து பிரியும் வரை வதக்கவும்.
 7. இப்போது புளிக்கரைசலையும், தேவையான தண்ணிர் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
 8. நன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.
 9. வெற்றிலை இலைத் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
 10. அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Reviews for Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.