தக்காளி தொக்கு | Thakali Thoku in Tamil

எழுதியவர் Priya Mani  |  14th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Thakali Thoku recipe in Tamil,தக்காளி தொக்கு, Priya Mani
தக்காளி தொக்குPriya Mani
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

578

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

தக்காளி தொக்கு recipe

தக்காளி தொக்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Thakali Thoku in Tamil )

 • தக்காளி 1 கிலோவில் இருந்து 1 1/2 கிலோ (தக்காளியைச் சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்)
 • தேவையான அளவு எண்ணெய்
 • கடுகு 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
 • காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் 3 தேக்கரண்டி
 • பெருங்காயம் 1/2 தேக்கரண்டி
 • உலர்ந்த பவுடர்: (வெறுமனே வறுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்)
 • மல்லி 1 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய் 4ல் இருந்து 5
 • எள்ளு 1 தேக்கரண்டி (வெள்ளை)

தக்காளி தொக்கு செய்வது எப்படி | How to make Thakali Thoku in Tamil

 1. ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் கடுகு சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், தக்காளிச் சாந்து சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும் (இஞ்சிப்பூண்டு விழுதையும் நீங்கள் சேர்க்கலாம்).
 2. உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், காஷ்மீர் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடியிட்டு முடவும். சிம்மில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். உலர் மாவை 1ல் இருந்து 1 1/2 தேக்கரண்டி. சிம்மில் 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
 3. அடுப்பை நிறுத்தவும். ஆறட்டும். காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும். உங்கள் தக்காளி ஊறுகாய்/தொக்கை ஆவிபறக்கும் சாதம், இட்லி, தோசை, இன்னபிறவற்றோடு மகிழவும்.

எனது டிப்:

நல்ல நிறமுள்ள தக்காளியை வாங்கிக்கொள்ளவும்

Reviews for Thakali Thoku in tamil (0)