வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு போண்டா

Photo of Potato bonda by Maritta Felix at BetterButter
458
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு போண்டா

Jun-15-2018
Maritta Felix
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு போண்டா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாலை நேர உணவு.இதை செய்வது மிக எளிது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு ஒரு கப்
  2. மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. தண்ணீர் தேவைக்கேற்ப
  7. உருளைக்கிழங்கு ஒன்று வேக வைத்தது
  8. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் ஒன்று
  10. கொத்தமல்லி பொடியாக நறுக்கியது அரை கப்
  11. வெங்காயம் ஒன்று

வழிமுறைகள்

  1. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு,கொத்தமல்லி,மிளகு ,வெங்காயம் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. கடலை மாவில் மிளகாய் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. இப்பொழுது உருட்டி வைத்த உருண்டையை எடுத்து பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
  5. சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார் ஆகிவிட்டது.
  6. இதை சாம்பார் தேங்காய் சட்னியுடன் சுவைத்து மகிழலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்