Photo of Sambhar by Priya Mani at BetterButter
1598
62
4.4(0)
0

சாம்பார்

May-16-2016
Priya Mani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேகவைத்தத் துவரம் பருப்பு 2 கப்
  2. உங்களுக்குப் பிடித்த காய்கறிகள் ஏதாவ: (சதுரமாக வெட்டப்பட்டது)
  3. சிறிய வெங்காயம் உங்கள் விருப்பத்திற்கேற்ப
  4. முருங்கைக்காய் உங்கள் விருப்பத்திற்கேற்ப
  5. பூசணிக்காய் 1 கப்
  6. கேரட் 1 கப்
  7. தக்காளி 7ல் இருந்து 8 வரை (விருப்பத்திற்கேற்ப)
  8. எலுமிச்சை அளவு புளி உருண்டைகள் தண்ணீரில் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. மஞ்சள் தூள் 1/2 கப்
  11. சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
  12. காஷ்மீர் மிளகாய் பொடி 3/4 தேக்கரண்டி
  13. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  14. காய்கறிகளை வதக்க எண்ணெய்
  15. தாளிப்பதற்கு 1 தேக்கரண்டி நெய்
  16. கடுகு 1/2 தேக்கரண்டி
  17. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  18. கறிவேப்பிலை கொத்துமல்லி உங்கள் விருப்பத்திற்கேற்ப
  19. 1 காய்ந்த மிளகாய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில், எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் வெங்காயம், தக்காளி அதைத் தொடர்ந்து காய்கறிகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. காய்கறிகள் பாதி வெந்ததும், புளிக்கரைசலை கிட்டத்தட்ட 1 கப் சேர்க்கவும். உப்பு, சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், பெருங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து நன்றாகக் கலக்கவும். இது 15ல் இருந்து 20 நிமிடங்கள் கொதிக்கட்டும், அளவு குறையவேண்டும்.
  3. பொடியின் பச்சை வாடை போனதும், வேகவைத்த துவரம் பருப்பையும் தேவையான தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு சுவை பார்த்துவிட்டு மேலும் 5ல் இருந்து 7 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  4. கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  5. ஒரு தனி கடாயில், நெய் சேர்த்து அவை உருகியதும் கடுகு, வெந்தயம் சேர்த்து, அவை வெடிக்க ஆரம்பித்ததும் காய்ந்த மிளகாய், 1/2 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து அவற்றை வறுக்கவும்.
  6. இந்த தாளிப்பை சாம்பார் பாத்திரத்தில் ஊற்றவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்