வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பிரெட் ரோல்

Photo of Chicken bread roll by Margaret Charles at BetterButter
194
0
0.0(0)
0

சிக்கன் பிரெட் ரோல்

Jun-18-2018
Margaret Charles
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பிரெட் ரோல் செய்முறை பற்றி

எல்லா வயதினரும் விரும்பும் சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சண்டவிச் பிரெட் 1 பாக்கெட்
  2. சிக்கன் கொத்தியது 300 கி
  3. வெங்காயம் பொடியாக நறுக்கியது 2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  5. மிளகாய் பொடி 2 தே க
  6. கரம் மசாலா 1 தே க
  7. முட்டை 2
  8. ரொட்டி தூள் 50 கி
  9. மைதா மாவு 1 மே க
  10. தண்ணீர் 1 தே க
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சண்டவிச் பிரெட் ஐ ஓரங்களை வெட்டி சப்பாத்தி போல் நன்கு தேய்த்து கொள்ளவும்
  2. மைதா மாவை சிறிது தண்ணீர் கலந்து ஒரு பசை போல் கலக்கவும். அதை தனியே வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. சிக்கனை நன்கு கழுவி, அதை சேர்த்து வதக்கவும்
  6. மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
  7. பின்னர் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிக்கன் கலவை தயார்
  8. பிரெட்டின் நான்கு பக்கமும் மைதா பேஸ்ட்டை தடவவும்
  9. உள்ளே சிக்கன் கலவை வைத்து, உருட்டவும்
  10. முட்டையில் தோய்த்து, ரொட்டி தூளில் பிரட்டவும்
  11. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்