வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு அவள் லட்டு

Photo of Red poha ladoo by Nancy Samson at BetterButter
410
3
0.0(0)
0

சிவப்பு அவள் லட்டு

Jun-20-2018
Nancy Samson
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு அவள் லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமான தின்பண்டம் வகையை சேர்ந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிவப்பு அவல் -1+1/2 கப்
  2. பொட்டுக்கடலை - 1/4 கப்
  3. முந்திரி - 1/4 கப்
  4. ஏலக்காய் - 7
  5. நாட்டு சர்க்கரை- தேவையான அளவு
  6. தேங்காய் துருவல்- 1/4 கப்(விரும்பினால்)
  7. உப்பு -1 சிட்டிகை
  8. நெய்- 6மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிவப்பு அவல், பொட்டுக்கடலை, முந்திரி, ஏலக்காய், தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியாக நெய்யில் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
  2. வறுத்த அவல், ஏலக்காய் இரண்டையும் ஒன்றுக்குபாதியாக மிக்ஸியில் ஒரு ஒட்டு ஓட்டி எடுத்து வைக்கவும்.
  3. நாட்டு சர்க்கரையை துருவி, சிறிதளவு நீர் ஊற்றி நன்கு கரைக்கவும்.
  4. இந்த கரைசலை வடிகட்டியில் வடிகட்டி , ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. இப்போது அரைத்த அவல், ஏலக்காய், வறுத்த பருப்பு, தேங்காய் துருவல், 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
  6. இதில் சர்க்கரை பாகை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்.
  7. கைகளில் நெய் தடவி, சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  8. சிவப்பு அவல் லட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்