வீடு / சமையல் குறிப்பு / மணப்பாறை முறுக்கு

Photo of Manapparai Murukku by Sandhya Ramakrishnan at BetterButter
423
12
5.0(0)
0

மணப்பாறை முறுக்கு

May-19-2016
Sandhya Ramakrishnan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
20 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 20

 1. அரிசி மாவு – 1 கப்
 2. உளுந்து மாவு – 1 தேக்கரண்டி
 3. எள்ளு – 1 ½ தேக்கரண்டி
 4. ஓமம் – 1 ¼ தேக்கரண்டி
 5. சீரகம் – 1 ¼ தேக்கரண்டி
 6. வெண்ணெய் – 1 தேக்கரண்டி
 7. உப்பு – சுவைக்கேற்ற அளவு
 8. பெருங்காயம் – இரண்டொரு சிட்டிகை
 9. எண்ணெய் – பொரிப்பதற்கு
 10. ஸ்டார் சல்லடை, முறுக்கு அச்சில்

வழிமுறைகள்

 1. அரிசி மாவை 3ல் இருந்து 4 நிமிடங்கள் சற்றே சூடாகும்வரை வறுக்கவும். அரிசி மாவு நிறம் மாறக்கூடாது. சற்றே சூடாகவேண்டும்.
 2. உளுத்தம்பருப்பை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். பின்னர் பயன்படுத்துவதற்காக மிக அதிகமாகத் தயாரித்தேன். இந்த அளவுக்கு, 2 தேக்கரண்டி உளுந்தை வறுத்தாலே போதும்.
 3. ஆறட்டும், அதன்பிறகு மென்மையான பவுடராக அரைத்துக்கொள்ளவும். பவுடரை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு பெரிய பாத்திரத்தில், அரிசி மாவு, 1 தேக்கரண்டி உளுந்து மாவு, எள்ளு, சீரகம், ஓமம், பெருங்காயம், உப்பு, வெண்ணெய் சேர்க்கவும். மாவில் சேர்ப்பதற்கு முன் சீரகத்தையும் ஒமத்தையும் கொஞ்சம் பொடி செய்துகொண்டேன்.
 5. உங்கள் கைகளைக் கொண்டு அனைத்துப் பொருள்களையும் நன்றாகக் கலந்து வெண்ணெயை சமமாகச் சேர்க்கவும்.
 6. இப்போது மெதுவாகத் தண்ணீரைச் சேர்த்து கெட்டிப்படுத்தவும், ஆனால் மாவு மிருதுவாக இருக்கவேண்டும். பயன்படுத்தும் வரை மூடி வைக்கவும்.
 7. முறுக்கு தயாரிக்கும்போது மாவு வடைத்தால், மாவு காய்ந்துவருகிறது என்று பொருள். மாவின் மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிறகு முயற்சிக்கவும்.
 8. நேர்த்தியான வடிவத்தைப் பெறுவதற்குக் கொஞ்சம் பயிற்சி தேவைப்படும். பார்வைக்கு முழுமையான வட்டமாகப் பெறுவதில் நான் பாதியளவே வெற்றிபெற்றேன்.
 9. கொதிக்கும் எண்ணெயில் மெதுவாக முறுக்கை விட்டு பழுப்பாகும் வரை பொரிக்கவும். ஒரு சமயத்தில் 4 முறுக்குகளை நான் பொரித்தெடுத்தேன்.
 10. பொரிக்கும்போது வானலியை மூடவேண்டாம். பாதி உலர்ந்த பழுப்பாக இருக்கும் முறுக்கை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி மீதமுள்ள மாவுக்கும் இதையே செய்யவும்.
 11. இப்போது திரும்பவும் பாதி வெந்த முறுக்குத் தொகுப்புகளை மீண்டும் இரண்டாவது முறை பொரிக்கவும். இந்த செயல்பாடு முறுக்கை மேலும் மொறுமொறுப்பாக்கும். இப்போது பொன்னிறமாகும்வரை பொரித்து வடிக்கட்டவும்.
 12. காற்றுப்புகாத பாத்திரத்தில் வைப்பதற்கு முன் அவற்றை முழுமையாக ஆறவிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்