வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி (மூலி) சாம்பார்

Photo of Mooli Sambhar  by Kalpana Vinay at BetterButter
134
8
4.0(0)
0

முள்ளங்கி (மூலி) சாம்பார்

May-19-2016
Kalpana Vinay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு 1/3 கப்
  2. முள்ளங்கி தோலுரிக்கப்பட்டு நறுக்கப்பட்டது 3/4 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. வெங்காயம் நறுக்கப்பட்டது 1/4 கப்
  5. தக்காளி 1/2 கப் நறுக்கப்பட்டது
  6. கடுகு 1/2 தேக்கரண்டி
  7. கடலை பருப்பு 1/2 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை 12
  9. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  10. வெந்தயம் 6
  11. சாம்பார் பொடி 2 தேக்கரண்டி
  12. எலுமிச்சை அளவில் புளி
  13. உப்பு 1 தேக்கரண்டி
  14. மஞ்சள் 1/2 தேக்கரண்டி
  15. சிவப்பு மிளகாய் 1
  16. பச்சை மிளகாய் 1 சிறியது விதைகள் நீக்கப்பட்டது
  17. நாட்டு நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பருப்பைக் கழுவி, தண்ணீரில் குறைந்தது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. புளியை 1/4 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  3. வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  4. ஒரு பிரஷர் குக்கரில் 2 கப் தண்ணீரை கொதிக்கவிடவும். நறுக்கப்பட்ட முள்ளங்கியையும் பருப்பையும், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பிரஷர் குக்கரில் 15 நிமிடத்திற்கு சிறு தீயில் வேகவைக்கவும். மூடியைத் திறந்து பிரஷர் குக்கரில் பருப்பை மசிக்கவும்.
  5. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் எடுத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பு கொஞ்சம் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து அதை வதக்கிக்கொள்ளவும்.
  6. நறுக்கப்பட்ட தக்காளியை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  7. புளி சாறை சேர்த்து புளியின் பச்சை வாடை போகும்வரை வேகவைக்கவும்
  8. தக்காளிக் கலவையை பருப்புடன் சேர்த்து வேகவைக்கவும். அடர்த்தியாக இருந்தால் கொஞ்சம் வெந்நீர் சேர்க்கவும்.
  9. இன்னொரு கடாயில் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து, பெருங்காயம்+ வெந்தயப்பொடியைச் சேர்க்கவும். முழு சிவப்பு மிளகாயை அதனுள் போடவும்.
  10. சிறிது நேரம் கலக்கி பருப்புடன் கலந்துகொள்ளவும்.
  11. முள்ளங்கி சாம்பாரை சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்