வெங்காய பூண்டு குழம்பு | Venghiya poondhu kozhambu in Tamil

எழுதியவர் Mahi Venugopal  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Venghiya poondhu kozhambu by Mahi Venugopal at BetterButter
வெங்காய பூண்டு குழம்புMahi Venugopal
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

136

0

வெங்காய பூண்டு குழம்பு recipe

வெங்காய பூண்டு குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Venghiya poondhu kozhambu in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • எண்ணெய் (நல்லெண்ணெய் சிறப்பானது) - 4 தேக்கரண்டி
  • வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
  • முழு வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 1 கையளவு (சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது)
  • கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • காய்ந்த சிவப்பு மிளகாய் - 2 எண்ணிக்கை ( ஒவ்வொன்றும் இரண்டாக நறுக்கப்பட்டது)
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • வெல்லம் - 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி
  • மிளகாய்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
  • புளி - 1 சின்ன ஆரஞ்சு அளவிலான உருண்டை (வெந்நீரில் ஊறவைத்து இரண்டு முறை சாறைப் பிழிந்துகொள்ளவும்)
  • பூண்டு - 5 எண்ணிக்கை (தோலுரிக்கப்பட்ட கழுவப்பட்டது)
  • சின்ன வெங்காயம் - 20 எண்ணிக்கை (தோலுரிக்கப்பட்டு கழுவப்பட்டது)

வெங்காய பூண்டு குழம்பு செய்வது எப்படி | How to make Venghiya poondhu kozhambu in Tamil

  1. ஒரு கடாயைச் சூடுபடுத்தி எண்ணெயைச் சேர்த்து அது சூடானதும் கடுகைப் பொரிக்கவிடவும். அதன்பிறகு கடலை பருப்பு, பெருங்காயம் சேர்த்து பிறட்டிப்போட்டு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். வெளுக்கும்வரை அவற்றை பிறட்டவும். இப்போது வெந்தயம் சேர்த்து முடிந்ததும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  2. இப்போது மசாலா பகுதி வருகிறது. ஒரு அகலமானத் திறந்த பாத்திரத்தை எடுத்து புளிக்கரைசலைச் சேர்க்கவும். அதன்பிறகு மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, வெல்லம் ஆகியவற்றைக் கலக்கவும். வெல்லம் கரையும் வரை கலக்கவும். இப்போது அனைத்தையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. அடுப்பைப் பற்றவைக்கவும். இப்போது மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும். மேலே எண்ணெய் தனியாக மிதப்பதைப் பார்க்கும்போது, அது இறக்குவதற்கான நேரம். இப்போது இறுதியாக வெந்தயத் தூளைச் சேர்க்கவும்.
  4. சுத்தமானவொரு உலர்ந்த பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு வாரத்திற்கு பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். வெ ள்ளைச் சாதம், தோசை, இட்லியுடன் அருமையாக இருக்கும்.

எனது டிப்:

வெந்தயப்பொடி தயாரிப்பு: கடாயைச் சூடுபடுதி வெந்தயத்தை உலர் நிலையிலேயே 1/2 டம்ளர் வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாகும்வரை வறுத்து, கடாயில் இருந்து எடுத்து ஆறவிடவும். மென்மையானப் பவுடராக அரைத்து சேமித்து வைத்துக்கொள்ளவும். இதை 2-3 மாதங்கள் வைத்துப் பயன்படுத்தலாம்.

Reviews for Venghiya poondhu kozhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.