மினி ஆனியன் தோசை | Mini onion Dosai in Tamil

எழுதியவர் Chaitali Anand  |  20th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mini onion Dosai by Chaitali Anand at BetterButter
மினி ஆனியன் தோசைChaitali Anand
 • ஆயத்த நேரம்

  8

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

80

0

மினி ஆனியன் தோசை recipe

மினி ஆனியன் தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Mini onion Dosai in Tamil )

 • தோலில்லா முழு உளுந்து 1 கப்
 • உடைத்த கோதுமை 2 கப்
 • வெந்தயம் 1 தேக்கரண்டி
 • கையளவு அடர்த்தியான அவல்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
 • கொத்துமல்லி இலைகள் 1/2 கப்
 • தேவையான அளவு எண்ணெய்
 • தேவையான அளவு தண்ணீர்

மினி ஆனியன் தோசை செய்வது எப்படி | How to make Mini onion Dosai in Tamil

 1. உளுந்தையும் வெந்தயத்தையும் கழுவு ஊறவைக்கவும்.
 2. வேறொரு பாத்திரத்தில் கையளவு அவலுடன் உடைத்த கோதுமையையும் ஊறவைக்கவும்.
 3. 3-4 மணி நேரங்களுக்குப் பிறகு தேவையான அளவு சிறிது தண்ணீரைச் சேர்த்து ஊறவைத்து வடிக்கட்டிய உளுந்தை அரைத்துக்கொள்ளவும்.
 4. வடிக்கட்டிய உடைத்தக் கோதுமையை அவலுடன் சாந்தாகும்வரை அரைத்துக்கொள்ளவும்.
 5. அரைத்த பருப்பையும் உடைத்தக் கோதுமையையும் நன்றாகக் கலந்துகொள்ளவும். உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். மாவு பொங்குவதற்கு இடமுள்ள ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தை மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும். இரவு முழுவதும் நொதிக்க விடவும். அல்லது குறைந்தபட்சம் 6-7 மணி நேரங்களுக்கு விட்டு வைக்கவும்.
 6. அடுத்தநாள் உங்கள் மாவு சற்றே மிருதுவாகி பஞ்சுபோல் பொங்கியிருக்கவேண்டும். குமிழ்களும் துவர்ப்பு வாடையும் இருக்கும். ஊற்றும் பதத்திற்கு தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்துக்கொள்ளவும்.
 7. வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 8. சூடுபடுத்தப்பட்ட தோசைக் கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி சற்றே பரவவிடவும்.
 9. நறுக்கிய வெங்காயத்தையும் கொத்துமல்லியையும் மெதுவாகத் தூவி கொஞ்சம் எண்ணெய்யையும் விடவும்.
 10. மேல் பக்கத்திலிருந்து குமிழ்கள் வரத் தொடங்கியதும் மெதுவாகத் தூக்கி தோசைத் திருப்பிப்போடவும்.
 11. வெங்காயம் வேகட்டும், கருக ஆரம்பித்ததும் தோசை பரிமாறுவதற்குத் தயார்.
 12. பொடியோடு அல்லது உங்களுக்குப் பிடித்த சட்டினியோடு பரிமாறவும். அதன்பின் சூடான கப்பா டீ அருந்தவும்.

எனது டிப்:

வெங்காயத்தோடு, கூடுதல் ருசிக்கும் கொஞ்சம் மிளகாய்ப்பொடியைத் தூவிக்கொள்ளலாம். சுவையான விளைவுகளுக்கு மேலே வெண்ணெய்யுடன் பரிமாறவும்!!

Reviews for Mini onion Dosai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.