மோர் உருண்டை குழம்பு | Mor Urundai Kulambu in Tamil

எழுதியவர் Sharanya Raghuraman  |  21st May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Mor Urundai Kulambu by Sharanya Raghuraman at BetterButter
மோர் உருண்டை குழம்புSharanya Raghuraman
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

86

0

Video for key ingredients

  மோர் உருண்டை குழம்பு recipe

  மோர் உருண்டை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mor Urundai Kulambu in Tamil )

  • கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 8ல் இருந்து 10 இலைகள்
  • சிவப்பு மிளகாய் - 2 எண்ணிக்கை
  • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  • கடுகு - 1தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • கொத்துமல்லி - 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கப்பட்டது
  • வெங்காயம் - 1 எண்ணிக்கை, பொடியாக நறுக்கப்பட்டது
  • இஞ்சி - 1/2 இன்ச் துண்டு
  • பச்சை மிளகாய் - 2
  • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  • துவரம்பருப்பு - 1 கப்
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 1/2 கப்
  • கெட்டித்தயிர்- 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • வறுத்த கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  • தேங்காய் - 1/2 கப்

  மோர் உருண்டை குழம்பு செய்வது எப்படி | How to make Mor Urundai Kulambu in Tamil

  1. தேங்காய், வறுத்தக் கடலை பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கெட்டித்தயிர், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு பிளண்டரில் மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. உளுத்தம்பருப்பையும் துவரம்பருப்பையும் கழுவி 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்
  3. தண்ணீரை முற்றிலுமாக வடிக்கட்டி உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
  4. இந்தக் கலவையை ஒரு பாத்திரத்திற்க மாற்றி நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் கொத்துமல்லியையும் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. உங்கள் இட்லி தட்டுகளில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு பருப்புக் கலவையை எடுத்து இட்லித் தட்டில் வைக்கவும். 12 உருண்டைகள் கிடைக்கும்.
  6. இந்த உருண்டைகளை 7ல் இருந்து 8 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  7. மூடியைத் திறந்து வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். வெந்ததும் கடினமாகிவிடும்.
  8. பருப்பு உருண்டைகள் தயார். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. தேங்காய் சாந்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்து சூடுபடுத்திக்கொள்ளவும். தண்ணீர் சேர்த்து பதத்திற்கு சரிசெய்துகொள்ளவும். அடர்த்தியாகவும் இருக்கக்கூடாது தண்ணீராகவும் இருக்கக்கூடாது.
  10. கொதி நிலைக்கு வந்ததும், பாதி கறிவேப்பிலையையும் கொத்துமல்லியையும் சேர்க்கவும். மீதி பாதியை அலங்கரிப்பதற்கு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  11. வேகவைத்த பருப்பு உருண்டைகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
  12. மெதுவாகக் கலந்து மிதமானச் சூட்டில் ஒரு நிமிடம் வேகவைக்கவும். அடுப்பை நிறுத்தவும்.
  13. தாளிப்புப் பாத்திரத்தில் எண்ணெய்யைச் சூடுபடுத்தி கடுகைப் பொரிக்கவும். உளுத்தம்பருப்பு சீரகத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். சிவப்பு மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும். தீயை நிறுத்தவும்.
  14. இந்தச் சூடானத் தாளிப்பைக் குழம்பில் ஊற்றவும். தாளிப்பைச் சரிபார்த்து, கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சாதத்தோடு பரிமாறவும்.

  எனது டிப்:

  உத்திரவாதமுள்ள சுவைக்கு தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்.

  Reviews for Mor Urundai Kulambu in tamil (0)