வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி ராகி மினி பூரி

Photo of Spicy ragi mini puri by Krishnasamy Vidya Valli at BetterButter
267
3
0.0(0)
0

ஸ்பைசி ராகி மினி பூரி

Jun-26-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி ராகி மினி பூரி செய்முறை பற்றி

கேழ்வரகு வைத்து செய்யும் சுவையான பூரி இது. தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. தயிருடன் சாப்பிடலாம். ஒருவருக்கு ஐந்து வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு மாவு -1/2 கப்
  2. கோதுமை மாவு கால் கப்
  3. ரவை ஒரு தேக்கரண்டி
  4. உப்பு அரை தேக்கரண்டி
  5. காரப் பொடி அரைத்தேக்கரண்டி
  6. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  7. பெருங்காயம் 2 சிட்டிகை
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருள்கள் எண்ணெய் தவிர தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து உருட்டி கொள்ளவும்
  2. சிறு சிறு பூரிகளாக இட்டு கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்தெடுக்கவும்
  4. தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை தயிர் அல்லது குருமாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்