வீடு / சமையல் குறிப்பு / சத்துமாவு சாக்லேட் பிரவுணீ (செய்முறை குக்கரில்)

Photo of Health mix chocolate brownie by Fathima Beevi at BetterButter
281
3
0.0(0)
0

சத்துமாவு சாக்லேட் பிரவுணீ (செய்முறை குக்கரில்)

Jun-28-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சத்துமாவு சாக்லேட் பிரவுணீ (செய்முறை குக்கரில்) செய்முறை பற்றி

சத்துமாவு சாக்லேட் பிரவுணீ (செய்முறை குக்கரில்)

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சத்து மாவு - 1 கப்
  2. டார்க் சாக்லேட்  - 35 கிராம்
  3. பட்டர் - 30 கிராம்
  4. வெண்ணிலா எசன்ஸ் - 1/2 தே. கரண்டி
  5. பேக்கிங்  பவுடர்  - 1/2 தே. கரண்டி
  6. பேக்கிங் சோடா  - 1/2 தே. கரண்டி
  7. உப்பு- ஒரு சிட்டிகை
  8. பால் - 1 1/4 கப்
  9. கோகோ பவுடர் - 1.5 மேசைக்கரண்டி
  10. சுத்திகரிக்கப்படாத சர்க்கரை - 4 மேசைக்கரண்டி ( சத்து மாவில் இனிப்பு உள்ளதால் தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கொள்ளவும்)
  11. அலங்கரிக்க தேவையான பொருட்கள்:
  12. டார்க் சாக்லேட்  - 15 கிராம் - நன்கு துருவிக் கொள்ளவும்
  13. வால்நட் - 10 - நன்கு பொடித்து கொள்ளவும்
  14. பிஸ்தா  - 10 - நன்கு பொடித்து கொள்ளவும்
  15. பாதாம் பருப்பு  - 5 - நன்கு பொடித்து கொள்ளவும்

வழிமுறைகள்

  1. குக்கரில் உப்பு/மண் இட்டு 5 நிமிடம் சூடேற்ற வேண்டும்(பெல்ட் மற்றும் விசில் உபயோகிக்க கூடாது)
  2. ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடாக்கவும். மற்றொரு பாத்திரத்தை தண்ணீரின் மேல் வைத்து, பாத்திரத்தில் டார்க் சாக்லேட் மற்றும் பட்டர் இட்டு உருக்க வேண்டும்.(டபிள் பாய்லர் மெத்தட்)
  3. நன்கு உருகியதும் சிறிது நேரம் குளிர வைக்கவும்.
  4. பின்பு மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பால் சேர்த்து கிளறவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சிறிது பட்டர் தேய்த்து கிளறிய கலவை யை ஊற்றி துருவிய டார்க் சாக்லேட்களை கலவையின் நடுவில் புதைத்து வைக்கவும்..
  6. பொடித்த பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட்களை கலவை யின் மேல் தூவி விடவும்.
  7. கலவை உள்ள பாத்திரத்தை இரண்டு முறை மெதுவாக தரையில் தட்டி, பின்பு குக்கரினுல் வைத்து 40-45 நிமிடங்கள் மிதமான தீயில்  வேக வைக்கவும்.
  8. 45 நிமிடத்திற்கு பிறகு குக்கரை திறந்து கேக்   தயாராகி விட்டதா என சரி பார்க்கவும்.
  9. கேக் தயாரான பின் குக்கரில் இருந்து எடுத்து குளிர வைக்கவும்.
  10. குளிர்ந்த பின் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்