வீடு / சமையல் குறிப்பு / சேப்பங்கிழங்கு வருவல்

Photo of Arbi Fry by Jayasakthi Ekambaram at BetterButter
168
1
0.0(0)
0

சேப்பங்கிழங்கு வருவல்

Jun-28-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேப்பங்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

சேப்பங்கிழங்கு உடன் மிளகாய்த்தூள் மசாலா சேர்த்து செய்யும் வருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேப்பங் கிழங்கு 250 கிராம்
  2. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  3. தக்காளி ஒன்று
  4. வெங்காயம் ஒன்று
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. சோம்புத் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தூள் தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  9. சமையல் எண்ணெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சோம்பு தூள் மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்
  5. பொரித்த கிழங்கை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும்
  6. கிழங்கின் மேல் அரைத்த மசாலாவை ஊற்றி நன்றாக கலக்கவும்.
  7. இதனை குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும்
  8. அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடு பண்ணவும்
  9. எண்ணெய் சூடானதும் சேப்பங்கிழங்கை அதில் போட்டு சிறிய தீயில் வைத்து வறுத்து எடுக்கவும்
  10. நன்றாக முறுகலாகும் வரை வறுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்