Photo of Idly manchurian by Benazer Abdul Kader at BetterButter
358
2
0.0(1)
0

Idly manchurian

Jun-28-2018
Benazer Abdul Kader
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைனீஸ்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி 4
  2. மைதா மாவு 2 மே க
  3. கார்ன் ஃப்லோர் 2 மே க
  4. உப்பு தேவையான அளவு
  5. வெங்காயம் பெரிது 1
  6. குடைமிளகாய் மீடியம் 1
  7. பூண்டு 1 பல்
  8. பச்சை மிளகாய் 1
  9. சோய் சாஸ் 1/2 தே க
  10. சில்லி சாஸ் 1/2 தே க
  11. தக்காளி சாஸ் 2 மே க
  12. சர்க்கரை 1/2 தே க
  13. வெங்காயத்தாள் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி இட்லி மாவு பதத்திற்கு வைக்கவும்
  2. பின்னர் இட்லியை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைக்கவும்
  3. பின்னர் இட்லி துண்டுகளை இந்த மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. வதங்கியதும் சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்
  5. பின்னர் வெங்காயத்தின் அளவே வெட்டி வைத்திருக்கும் குடை மிளகாயையும் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்
  6. பின்னர் அதில் சோயா சாஸ், சில்லி சாஸ்,மற்றும் தக்காளி சாஸ் போட்டு நன்கு கிளறவும்
  7. இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் சர்க்கரை போட்டு கிளறவும்
  8. பின்னர் பொரித்து வைத்திருக்கும் இட்லியை இதனுடன் கிளறி உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  9. சாஸ் இட்லியுடன் நன்கு கலக்கும் வரை கிளறி 5 நிமிடங்கள் வேக விடவும்
  10. சுவையான இட்லி மஞ்சூரியன் ரெடி
  11. இதன் மீது சிறு துண்டுகளாக வெட்டிய வெங்காயத்தாள் தூவி சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jun-29-2018
Raihanathus Sahdhiyya   Jun-29-2018

Nice and tempting

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்