முட்டையில்லாத சிர்ரோ பைட்டுகள் | Eggless Churro Bites in Tamil

எழுதியவர் Shivani Saxena  |  24th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Eggless Churro Bites by Shivani Saxena at BetterButter
முட்டையில்லாத சிர்ரோ பைட்டுகள்Shivani Saxena
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

737

0

முட்டையில்லாத சிர்ரோ பைட்டுகள் recipe

முட்டையில்லாத சிர்ரோ பைட்டுகள் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Churro Bites in Tamil )

  • ஐசிங் சர்க்கரையும் இலவங்கத்தூளும், தூவுவதற்கு
  • சமையல் எண்ணெய் (பொரிப்பதற்கு)
  • 1 கப் மைதா
  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • 2 தேக்கரண்டி வழக்கமானச் சர்க்கரை
  • 3 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1/2 கப் பால்

முட்டையில்லாத சிர்ரோ பைட்டுகள் செய்வது எப்படி | How to make Eggless Churro Bites in Tamil

  1. ஒரு அடர்த்தியான அடிப்பாகமுள்ள கடாயில், பால், வெண்ணெய், சர்க்கரை, உப்பைச் சேர்க்கவும். மிதமானச் சூட்டில் வைத்து கொதிக்கவிடவும். கொதி நிலை அடைந்ததும், அடுப்பிலிருந்து இறக்கவும். வெண்ணிலா எசென்சையும் மைதாவையும் அதனோடு சேர்க்கவும். கட்டி சேராமல் மென்மையான மாவு பெறும்வரை கரண்டியால் கலந்துகொள்ளவும்.
  2. சமையல் எண்ணெயை ஒரு மொத்தமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மிதமானத் தீயில் சூடுபடுத்திக்கொள்க. அனைத்து சிர்ரோ மாவையும் ஒரு பைப்பிங் பையில் ஒரு பெரிய திறந்த நட்சத்திர டிப்புக்கு மாற்றிக்கொள்க.
  3. சூடான எண்ணெயில் 1ல் இருந்து 1.5 கோட் வெளியேற்றவும். கத்திரிக்கோலைப் பயன்படுத்தி மாவை வெட்டிக்கொள்ளவும். மாவு நேராக எண்ணெயில் விழுதவற்கு.
  4. கருகுவதைத் தவிர்ப்பதற்கு சிறு தொகுப்புகளாக சிர்ரோக்களைத் தயாரிக்கவும். அவ்வப்போது சிர்ரோக்களைக் கலக்கி, பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அதன்பின்னர் எண்ணெயிலிருந்து எடுத்து உறிஞ்சித் தாளில் கூடுதல் எண்ணெயை வடிக்கட்டவும். இதை ஒட்டுமொத்த சிர்ரோ மாவுக்கும் செய்யவும்.
  5. ஒரு சிறிய கலவை பாத்திரத்தில், இலவங்கத்தூள் சர்க்கரையை ஒன்றாகக் கலந்து, சிர்ரோக்களை இந்தக் கலவையில் பூசி சூடாகப் பரிமாறவும்.

Reviews for Eggless Churro Bites in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.