வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பட்டர் மசாலா

Photo of Paneer butter masala by Jayasakthi Ekambaram at BetterButter
362
1
0.0(0)
0

பன்னீர் பட்டர் மசாலா

Jun-30-2018
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

பனீரை வைத்து செய்யும் ஒரு குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 250 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  5. இலவங்கம் 2
  6. பட்டை ஒரு இன்ச் துண்டு
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. முந்திரி விழுது ஒரு ஸ்பூன்
  10. கெட்டியான பால் 100 மிலி
  11. உப்பு தேவையான அளவு
  12. வெண்ணெய் 2 ஸ்பூன்
  13. எண்ணெய் 2 ஸ்பூன்
  14. கஸ்தூரி மேத்தி அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பனீரை சதுரத் துண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பன்னீர் இலேசாக வறுத்துக்கொள்ளவும்
  3. வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்
  4. அத்துடன் இஞ்சி பூண்டு விழுதையும் வதக்கிக் கொள்ளவும்
  5. மிக்ஸியில் வெங்காயத்தையும் தக்காளியையும் இஞ்சி பூண்டு விழுதையும் அரைத்துக் கொள்ளவும்
  6. வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணையை ஊற்றவும்
  7. பட்டை லவங்கம் போட்டு தாளிக்கவும்
  8. அதில் அரைத்த விழுதை ஊற்றவும்
  9. மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  10. பன்னீரை சேர்த்து கொள்ளவும்
  11. முந்திரி விழுதையும் கஸ்தூரி மேத்தி இலையையும் பாலையும் சேர்க்கவும்
  12. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  13. கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்
  14. வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொத்தமல்லி தழைகளை போட்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்