வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ராகி இட்லி

Photo of Instant Ragi Idly by Sowmya Sundar at BetterButter
590
1
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ராகி இட்லி

Jul-03-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ராகி இட்லி செய்முறை பற்றி

ராகி மாவு மற்றும் ரவை சேர்த்து செய்யலாம் உடனடி இட்லி . இதற்கு ஊற வைக்கவோ அரைக்கவோ தேவையில்லை என்பதால் சுலபமான காலை நேரத்தில் செய்து விடலாம். ராகி கால்சியம் சத்து நிறைந்தது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு -1 கப்
  2. ரவை -1 கப்
  3. தயிர்-1/2 கப்
  4. தண்ணீர் -1 1/2 கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. ஈனோ சால்ட்-1 டீஸ்பூன்
  7. தாளிக்க
  8. நல்லெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  9. கடுகு-1 டீஸ்பூன்
  10. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  11. கடலை பருப்பு-1 டீஸ்பூன்
  12. பச்சை மிளகாய்-2 நறுக்கியது
  13. இஞ்சி-1 துண்டு நறுக்கியது
  14. கறிவேப்பிலை மல்லி சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ரவையை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  2. பின் ஆற வைத்து ராகிமாவு, உப்பு ,தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
  3. இப்போது மாவு சிறிது கெட்டியாக இருக்கும். மேலும் அரை கப் தண்ணீர் மற்றும் ஈனோ சால்ட் கலந்து கொண்டு இட்லி தட்டில் விட்டு பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  4. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்