வீடு / சமையல் குறிப்பு / ராகி பச்சபயிறு போளி

Photo of Ragi green gram Boli by Krishnasamy Vidya Valli at BetterButter
612
2
0.0(0)
0

ராகி பச்சபயிறு போளி

Jul-04-2018
Krishnasamy Vidya Valli
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி பச்சபயிறு போளி செய்முறை பற்றி

போளி எப்போதும் மைதாவில் தான் செய்வார்கள். அதேபோல் பூரணம் தேங்காய் அல்லது கடலைப்பருப்பில் செய்வார்கள். வித்யாசமாக ராகி மாவில் பச்சபயறு பூரணம் வைத்து போளி செய்துள்ளேன்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேல்மாவிற்கு தேவையானவை
  2. ராகி மாவு -1/2 கப்
  3. உப்பு -1 சிட்டிகை
  4. எண்ணெய் -3 தேக்கரண்டி
  5. பூரணத்திற்கு
  6. பச்சபயிறு 1/8 கப்
  7. வெல்லம் -2 மேஜைக்கரண்டி
  8. தேங்காய் துருவல் -2 தேக்கரண்டி
  9. ஏலப்பொடி -2 சிட்டிகை
  10. நெய் 1 தேக்கரண்டி
  11. போளி வாட்டுவதற்கு தேவையான அளவு நெய் /எண்ணெய்

வழிமுறைகள்

  1. மேல்மாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. அப்படியே அரைமணி நேரம் ஊறவிடவும்
  3. பச்சப்பயிறை வெறும் கடாயில் வறுத்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்
  4. கடாயில் நெய்விட்டு வெல்லத்தை போட்டு கரையவிடவும். விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  5. வேகவைத்த பயறு தேங்காய் துருவல் ஏலப்பொடி சேர்த்து சுருள கிளறி இறக்கவும்
  6. பிசைந்து வைத்த ராகி மாவை கையால் தட்டிக்கொண்டு அதன் மேல் செய்த பூரணத்தை வைக்கவும்
  7. ராகி மாவால் மூடி மீண்டும் தட்டிக்கொள்ளவும்
  8. தோசைகல்லில் நெய் /எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்
  9. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்