வீடு / சமையல் குறிப்பு / மூன்று பொருள் ரொட்டி

Photo of Tri ingrediant roti by Gayathri Sayeeram at BetterButter
359
0
0.0(0)
0

மூன்று பொருள் ரொட்டி

Jul-06-2018
Gayathri Sayeeram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
16 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மூன்று பொருள் ரொட்டி செய்முறை பற்றி

அரிசி மாவு ரவை மைதா மாவு சேர்த்து செய்யக்கூடிய ரொட்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. மைதா மாவு ஒரு கப்
  3. வெள்ளை ரவை ஒரு கப்
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. பச்சை மிளகாய் ஐந்து
  6. தேங்காய் கால் மூடி
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. தண்ணீர் 3 கப்
  9. எண்ணெய் சுடுவதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்
  2. தேங்காய் பச்சைமிளகாய் இஞ்சி மூன்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  3. இந்த தண்ணீரில் உப்பு அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் ரவை அரிசி மாவு மைதா மாவு மூன்றையும் கலந்து கொள்ளவும்
  5. தண்ணீர் கொதித்ததும் இந்த கலந்த மாவை அதில் ஊற்றி கிளறவும்
  6. மாவு கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து நன்கு கீழே இறக்கி வைத்து கிளறவும்
  7. கை பொறுக்கும் சூட்டில் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  8. இந்த உருட்டிய மாவை சிறுசிறு சப்பாத்திகளாக கைகளில் தட்டி சுட்டு எடுக்கவும்
  9. அல்லது பூரி பிரஸ்ஸில் போட்டு எடுக்கலாம்
  10. சப்பாத்தி சுடுவது போல் முதலில் இருபக்கமும் எண்ணெய் விடாமல் சுட்டு பிறகு எண்ணெய் ஊற்றி சுடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்