வீடு / சமையல் குறிப்பு / நாட்டு சக்கரை பால் கொழுக்கட்டை

Photo of Brown sugar milk kolukattai by kokila nalliyannan at BetterButter
849
2
0.0(0)
0

நாட்டு சக்கரை பால் கொழுக்கட்டை

Jul-16-2018
kokila nalliyannan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாட்டு சக்கரை பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

இந்த நாட்டுச் சர்க்கரை பால் கொழுக்கட்டை மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு ஒரு கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நெய் அரை டீஸ்பூன்
  4. கெட்டியான தேங்காய்ப் பால் ஒரு கப்
  5. தண்ணி தேங்காய்ப் பால் ஒரு கப்
  6. பால் ஒரு கப்
  7. ஏலக்காய் பொடி கால் டீஸ்பூன்
  8. நாட்டுச் சர்க்கரை ஒரு கப்
  9. தண்ணீர் அரை கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு நெய் மூன்றும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. இதில் கொதிக்கும் நீரை ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. அந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  4. அந்த உருண்டையில் ஒரு உருண்டையை தண்ணீரில் நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  5. நாட்டுச் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  6. இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் பால் ஒரு கப் இரண்டாம் தேங்காய்ப்பால் இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்
  7. பால் கொதித்த உடன் உருட்டி வைத்த உருண்டையை அதில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  8. உருண்டை நன்றாக பத்து நிமிடம் வெந்ததும் வெல்ல பாகு சேர்த்து நன்றாக கலக்கவும்
  9. வெல்ல பாகு சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  10. ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
  11. அடுப்பை அணைத்துவிட்டு திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலக்கவும்
  12. சுவையான பால் கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்