வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு பால் அல்வா

Photo of Gram flour milk halwa by Krishnasamy Vidya Valli at BetterButter
499
1
0.0(0)
0

கடலைமாவு பால் அல்வா

Jul-16-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு பால் அல்வா செய்முறை பற்றி

என்னதான் திருநெல்வேலி அல்வா பிரபலம் என்றாலும் டின்னர் பார்ட்டி அல்லது பண்டிகை நாட்களில் எளிதில் செய்யலாம் இந்த கடலைமாவு பால் அல்வா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு ஒரு கப்
  2. சீனி ஒரு கப்
  3. நெய் ஒரு கப்
  4. பால் 2 கப்
  5. முந்திரி பருப்பு -5 முதல் 10
  6. ஏலப் பொடி 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்
  2. 3/4 கப் நெய் விட்டு கடலை மாவை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும்
  3. பால் சேர்த்து நன்றாக வேக விடவும்
  4. பால் நன்றாக வற்றி கடலை மாவு வெந்ததும் சீனி சேர்த்துக் கிளறவும்
  5. மீதமுள்ள நெய் ஏலப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வர வேண்டும். அது தான் பருவம்.
  6. வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்