வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு சப்பாத்தி& பூரி மசால்

Photo of Healthy mix chapatti &poori masal by Balajayasri Dhamu at BetterButter
311
0
0.0(0)
0

சத்து மாவு சப்பாத்தி& பூரி மசால்

Jul-17-2018
Balajayasri Dhamu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு சப்பாத்தி& பூரி மசால் செய்முறை பற்றி

சத்துமாவை பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு 1 கப்
  2. சத்து மாவு 1கப்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. தேவையான அளவு உப்பு
  5. மாசால்
  6. பெரியவெங்காயம்1
  7. தக்காளி2
  8. உருளைக்கிழங்கு3
  9. பச்சைமிளகாய் 2
  10. கடுகு 1/2 ஸ்பூன்
  11. உளுந்து 1/2ஸ்பூன்
  12. கடலைப்பருப்பு
  13. கடலை மாவு3தேக்கரண்டி
  14. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்
  15. தேவையான அளவு உப்பு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சத்து மாவு உப்பு ,இரண்டு ஸ்பூன் எண்ணெய் ,தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்
  2. மாவு நன்றாக பிசைந்து கொண்டு 20 நிமிடம் மூடி வைக்க வேண்டும்
  3. பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்
  4. சப்பாத்தி கட்டையில் தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்க வேண்டும்
  5. இப்போது சத்து மாவுசப்பாத்தி ரெடி
  6. சத்து மாவு பூரி
  7. அதே மாவை பயன்படுத்தி கொள்ளலாம் பூரியை முதலில் செய்து கொள்ள வேண்டும்
  8. பூரிக்கு சற்று மொத்தமாக தேய்த்து கொள்ள வேண்டும்
  9. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்த மாவை போடவும்
  10. நன்றாக உப்பிய பின்னர் எடுத்து கொள்ள வேண்டும்
  11. இப்போது சத்து மாவு பூரி ரெடி
  12. மாசால்
  13. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலை பருப்பு பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்
  14. நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  15. வேகவைத்த உருளைக்கிழங்கு நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்
  16. கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து ஊற்றி கொள்ளவும்
  17. உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதி வந்தவுடன் இறக்கி கொள்ளவும்
  18. இப்போது மாசால் ரெடி
  19. இப்போது தட்டில் சத்து மாவு சப்பாத்தி ,பூரி மாசால் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்